Thursday, 25 April 2013

Contact Form வைப்பது எப்படி? Blogger Tip


நமது வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வலைப்பூவின் மூலம் தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன. பலர் தமது ப்ரொஃபைலில் தங்கள் ஈமெயில் ஐடி தந்து விடுகிறார்கள்.
இதன் மூலம் ஸ்பாம் மெயில்கள் வருவது தவிர்க்க முடியாது. இன்னும் சிலர் கமெண்ட் மாடரேசன் வைத்திருக்கும் நிலையில், ஏதேனும் சொல்ல விரும்பினால் அதில் சொல்லி, இதை வெளியிட வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். அவ்வாறு வைக்காத போது தொடர்பு கொள்வது ஒரு பிரச்சினை தான்.







அதாவது, உங்கள் ஈமெயில் ஐடி தெரியாமலே உங்களுக்கு அடுத்தவர் ஈமெயில் அனுப்பலாம். இந்த வசதியை www.emailmeform.com இலவசமாகத் தருகிறது. இத்தளத்துக்குச் சென்று நீங்கள் ஒரு கணக்கு துவங்கிக் கொண்டு, சில விவரங்களை அளித்து உங்கள் EMAIL FORM எப்படித் தோன்ற வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும்.






எப்படி என்று பார்ப்போம்,






அதில் கணக்கை தொடங்கிய உடன் Add Form என்பதை தெரிவு செய்து Templates பகுதிக்கு வரவும். அதில் Contact From என்பதை தெரிவு செய்யுங்கள். அதில் Customize என்பதை தெரிவு செய்யுங்கள்.










இதில் மூன்று பகுதிகள் இருக்கும்.









Add Field - இதில் தேவையான பகுதியை கிளிக் செய்து தெரிவு செய்து கொள்ளலாம். இதில் File, email, Dropdown என பலவற்றை சேர்க்கலாம்.




Field Settings - இங்கே பெயர், எழுத்துரு மாற்றம் போன்றவற்றை செய்யலாம். உதாரணமாக Name என்று உள்ளதை பெயர் என்று மாற்ற விரும்பினால் அதை செய்யும் பகுதி.




Form Settings - இதில் Form Title, Description, Alignment போன்றவற்றை மாற்றலாம். இதில் உள்ள Confirmation Options பகுதியில் Success Message என்பதை கொடுத்து விட்டு Open in a new window / tab என்பதை கிளிக் செய்து விடுங்கள்.










எல்லாம் முடிந்த பின் Save Form கொடுத்து Save செய்து விடுங்கள்.






இப்போது My Forms பகுதிக்கு நீங்கள் உருவாக்கிய Form-இல் Code என்பதன் மீது கிளிக் செய்யுங்கள்.












இப்போது வரும் பகுதியில் HTML Only என்பதை கிளிக் செய்து வரும் கோடிங்கை உங்கள் ப்ளாக்கில் Page/Post - ல் HTML பகுதியில் Paste செய்து விடுங்கள்.






அவ்வளவு தான் இனி அழகான Form உங்கள் வலைப்பூவில் இருக்கும். உங்கள் வாசகர்கள் எளிதில் உங்களை தொடர்பு கொள்ள முடியும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.






* நீங்கள் emailmeform தளத்தில் எந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்து உள்ளீர்களோ அதற்கு தான் இந்த மின்னஞ்சல்கள் வரும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz