Saturday, 1 June 2013
முகப்பருவை தடுக்க சில வழிகள்...
பொதுவாக முகப்பருக்கள் ஆண் பெண் என்ற இரு பாலாரிலும் 13-19 வயதுக்குடப்பட்ட விடலைப் பருவத்தினரையே அதிகமாக பாதிக்கும். அதற்கும் மேற்பட்ட வாலிப பருவத்தினரையும் விட்டு வைப்பதில்லை.
இவை முக அழகை குலைப்பதுடன் தன்னம்பிக்கையை கெடுக்கும் வகையில் அமைந்து சிலருக்கு மாறாத வடுக்களையும் ஏற்படுத்தி விட்டு செல்கின்றது. பொதுவாக முகப் பருக்கள் வரும் காரணங்களில் மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அதற்கு நிவாரணமாக உண்ணும் உணவிலிருந்து ஒரு சில மாற்றங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது.
அதில் முக்கியமாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கீரை உணவை தினமும் சாப்பிடலாம். சமைக்காத பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது.
சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்களுக்கும் இந்த முக பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். அதற்கு தினமும் ஆரஞ்சு பழரசத்தை முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு கழுவிட வேண்டும்.
தக்காளி மற்றும் பப்பாளிபழக் கூழையும் முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசை குறையும். எண்ணெய் பசை அதிகமுள்ள சோப்புகளைப் அறவே பயன்படுத்தக் கூடாது. மாறாக பயத்த மாவு, கடலை மாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி அவை காய்ந்தவுடன் வெது வெதுப்பான நீரினால் கழுவ வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களை தவிர்ப்பது நல்லது. கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், மற்றும் நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகளை அளவோடு சாப்பிடுவது நல்லது. காரம், உப்பு, புளி, இறைச்சி , மற்றும் காரசாரமான மசாலா சேர்த்த உணவுகள், முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
இளம் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும் அதைப் போல் அடிக்கடி வெதுவெதுப்பான நீரை பருகுவதும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும். முகப்பருக்கள் வந்த பிறகு சிகிச்சை எடுப்பதற்கு பதில்,அவை வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் அக்கறை செலுத்துவதே சாலச் சிறந்தது.
Labels:
பெண்கள்
No comments:
Post a Comment