Saturday, 1 June 2013

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?



மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலேக்டின் ஹார்மோன்கள் உருவாகும். சரியான விகிதத்தில் உருவாகி, வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடைந்திருந்தால் மார்பகம் பெரிதாகும்.

இதோடு மாதவிலக்கும் ஒழுங்காக வ‌ந்தால், உங்கள் பிரச்சனையை உணவு, உடற்பயிற்சி மூலமாகவே தீர்க்கலாம். புரோட்டீன் அதிகமுள்ள பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன் பவுடர், வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

மார்பு என்பது கொழுப்புகளால் சூழப்பட்ட பகுதி. எனவே கொழுப்பு அதிகமுள்ள சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட், மட்டன், முட்டை, பால் அடிக்கடி சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகலாம். செயற்கை முறையில் சிலிக்கான் என்ற பொருளைப் பொருத்தி, சர்ஜரி மூலமும் மார்பகத்தை பெரிதாக்கலாம்.

ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும் எனவும் கூற முடியாது. பக்கவிளைவு ஏற்பட வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz