Free Video Editing Software Corel videostudio Pro x5
வணக்கம் நண்பர்களே..!இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்றுதான் Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப் பற்றியும், மென்பொருளை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
வீடியோவை ஏன் எடிட் செய்ய வேண்டும்?
சில காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமான இரண்டு காரணங்கள்:
காரணம் ஒன்று:
1. இன்று இணையத்தில் எண்ணற்ற வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன. நமக்கு பிடித்தமானவைகளை நாம் தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்துகிறோம்.
தரவிறக்கிய வீடியோ முழுவதும் நமக்குத் தேவையில்லாமல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டால், அது கணினியிலோ அல்லது PenDrive, Memory Card போன்ற Removal Device சாதனங்களிலோ அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.
வீடியோவின் அளவு குறைவாக இருப்பதால் கிளிக் செய்த உடனே திறந்துகொள்ளும்.
காரணம் இரண்டு:
நம் வீட்டு விசேசங்களிலோ, அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளிலோ, நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடங்களிலோ நாம் நம் Mobile கொண்டு Video எடுத்திருப்போம்.
அதில் தேவையில்லாத நபர்கள் குறுக்கே வந்திருப்பார்கள்.. அல்லது தேவையற்ற ஒலிகள், இரைச்சல்கள் கூட வீடியோவில் பதிவாகியிருக்கும்.
இவ்வாறு தேவையில்லாத பகுதிகளை வெட்டி எடுக்கவும், தேவையற்ற பேச்சு இரைச்சல்களை நீக்கி, விழாவிற்கேற்ற ரம்மியமான பாடல்களை பிண்ணனியில் ஒலிக்கச் செய்யவும் இந்த வீடியோ எடிட்டிங் செய்யப்படுகிறது..
வீடியோ எடிட்டிங் எல்லோராலும் செய்ய முடியுமா?
முடியும். வீடியோ எடிட்டிங்கை தற்போது கணினி உபயோகிப்பவர்கள் அனைவராலும் செய்ய முடியும். தற்போது user friendly ஆகவே பல Video Editing Software-கள் இலவசமாக கிடைக்கிறது. அதில் சிறப்பான ஒன்றுதான் Corel VideoStudio Pro x5 .
இது Trial version ஆகதான் கிடைக்கிறது. இந்த சோதனை மென்பொருளிலேயே அதிக வசதிகளை நாம் பெற முடியும்.
இந்த மென்பொருளைத் தரவிறக்க : இந்த இணைப்பில் செல்லுங்கள்..
இங்கு சென்று download என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு மென்பொருள் தரவிறங்கும்.
Corel VideoStudio Pro x5வில் புதியதாக என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளது என்பதை விளக்கும் வீடியோ இது.
இனி என்ன?.. நீங்களும் ஒரு வீடியோ எடிட்டர்தான்..மிகச் சுலபமான இம்மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களும் எளிதாக உங்கள் வீடியோக்களை எடிட் செய்து, பலரும் பார்க்கும் வண்ணம் அழகுற வடிவமைத்து வீடியோவை மெருகூட்டலாம்.
வீடியோ எடிட்டிங் மட்டுமில்லீங்க.. Screen Recording -ம் இதில் செய்யலாம்...
உங்கள் கணினித் திரையை அப்படியே வீடியோவாக ரெக்கார்ட் செய்யலாம். அதாவது நீங்கள் வீடியோ டுடோரியல் நடத்த இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.நமது தங்கம்பழனி வலைதத்ளத்தில் இதற்கு முன்பு ஒரு சில வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். அதாவது பதிவில் எழுதியதை வீடியோவாக மாற்றியிருப்பேன்.. அதுபோல நீங்களும் உங்கள் கணினியில் நீங்கள் செய்யும் வேலைகளை அப்படியே வீடியோவாக பதிவு செய்யலாம்.
வீடியோவாக பதிவு செய்த்தை நண்பர்களுக்கு அனுப்பலாம். Youtube போன்ற வீடியோ தளங்களில் Upload செய்து பலரும் பார்த்து பயனுறு வகையில் செய்ய முடியும். நீங்கள் பதிவு செய்த வீடியோவை எடிட் செய்யலாம். தேவையான எஃபக்ட்களையும் கொடுக்கலாம்.. பின்னணி இசை, பின்னணி பாடல்கள் என அனைத்தையும் கொண்டு வரலாம்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எவ்வாறு செய்வது என்பதை இந்த வீடியோவில் கண்டுகொள்ளுங்கள்..
மென்பொருளைத் தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள்.. உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக எழுதுங்கள்..
இலவசமாக மென்பொருளைத் தரவிறக்க இணைப்பு சுட்டி: Download Free Corel VideoStudio Pro x5
குறிப்பு: இதே மென்பொருளை பணம் கொடுத்து வாங்கியும் அதிக வசதிகளைப் பெற்றுப் பயன்பெறலாம்.
நன்றி நண்பர்களே..!
No comments:
Post a Comment