சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் வரத்
தொடங்கும். ஒரு சிலர் இதற்கான காரணத்தை ஆய்வு செய்வார்கள்.
தங்களுடைய
இமெயில் முகவரிகளை பயன்படுத்தும் வெப்சைட்டுகள் சிலவற்றை நிச்சயமாக
கண்டறியலாம். ஆனால், அனைத்து ஸ்பேம் மெயில்களும் எங்கிருந்து வந்தன என்பதை
கண்டறிவது சிரமமான காரியம்.
முதலில் உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பயன்படுத்தும் சர்ச் இஞ்சினிலில்
உங்களுடைய
இமெயில் முகவரியினை டைப் செய்து உங்கள் முகவரி எங்கெல்லாம்இருக்கிறது
அல்லது பயன்படுத்தப்படுகிறது எனக் கண்டறியலாம். இந்த தேடல்முடிவுகள் மூலம்
எந்த எந்த தளங்கள் உங்கள் இமெயில் முகவரியை அணுக முடியும்
எனக் காணலாம். இவற்றில் பெரும்பாலும், நீங்கள் கடிதங்கள் எழுதும் இணையத்தள
முகவரிகளாக இருக்கலாம்.
அல்லது
நீங்கள் பயன்படுத்தும் சமூக தளங்களாக இருக்கலாம். இவற்றுக்கும் மீறி
பலதளங்கள் காட்டப்பட்டால் உடனே ஒவ்வொரு தளம் குறித்தும் அவற்றுடன்
உங்களுக்கான தொடர்பு குறித்தும் ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நீங்கள் அடிக்கடி இணையத்தளங்கள் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்களா? அல்லது
சமுதாய தேவை செய்திடும் அமைப்புகளின் இணையத்தளங்களை பார்வையிட்டு கடிதம்
எழுதுகிறீர்களா? அவற்றின் உறுப்பினரா? ஏதேனும் நியூஸ் லெட்டர்களை படித்து அவை
இலவசமாக அனுப்பப்படுகிறது என்பதற்காக அவற்றை பெற உங்கள் முகவரியை
தருகிறீர்களா? மேற்கண்ட செயல்களை நீங்கள் மேற் கொள்கையில் நிச்சயம், உங்கள்
இமெயில் முகவரிகளை அவை கேட்டிருக்கும்.
இத்தகைய தளங்களில் சில, சில மட்டுமே, உங்கள் முகவரிகளை தளங்களில் வெளி
யிடும். அல்லது பிற தள நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றிற்கு
முகவரிகளைத் தரும். அல்லது பாதுகாப்பற்ற முறையில் இவை உங்களை போன்ற
வாடிக்கையாளர்களின் முகவரி களைத் தங்கள் தளத்தில் வைத்திருக்கும்.
அவற்றை மற்றவர்கள் எளிதாக தேடி எடுத்து ஸ்பேம் மெயில்கள் அனுப்ப
பயன்படுத்தலாம்.
உங்களுக்கு ஸ்பேம் மெயில்கள் அனுப்பும் தளங்களின் முகவரிகள் கிடைக் கையில்
அவற்றுடன் உங்கள் உறவினை முறித்துக்கொள்ளும் வசதியை பயன்படுத் துங்கள்.
தேவையற்ற நியூஸ் லெட்டர்கள் அனுப்பும் தளங்களின் வாசகர்கள் பட்டியலிலிருந்து
முகவரியை எடுக்கும் வசதியை பயன்படுத்தி நீக்கிவிடுங்கள். தளங்கள் பாதுகாப்பானது
என்று தெரிந்தால் மட்டுமே உங்கள் முகவரியை தர வேண்டும்.
இல்லையெனில் முகவரியை தரும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.
No comments:
Post a Comment