Thursday, 18 April 2013

புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு பிராஜெக்ட் நிர்வாகம் செய்ய உதவும் பயனுள்ள தளம்.


புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கும் ஏற்கனவே நிறுவனம்
ஆரம்பித்தவர்கள் எப்படி தங்களின் பிரஜெக்ட் நிர்வாகத்தை எளிதாக
அமைக்கலாம் ஒவ்வொரு Team என்ன வேலை செய்கின்றனர்
என்பதில் தொடங்கி அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கிற
அத்தனை தகவகல்களையும் சேமித்து தேவைப்படும் போது
நமக்கு கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
நேரமேலாண்மை என்பது நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
இருப்பது முக்கியம் தான் மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய
நிறுவனங்கள் வரை தங்களின் நேரமேலாண்மையை பொருத்தே
புதிய பிராக்ஜெக்ட்-களின் கால அளவை நிர்ணயிக்கின்றனர். இதற்காக
மிகப்பெரிய அளிவில் நம்மிடம் நேரமேலாண்மைகான மென்பொருள்
இல்லையே என்ற எண்ணும் நம்மவர்களுக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://flow.io
ஒவ்வொரு நிறுவனமும் தங்களிடம் வேலை பார்க்கும் நபர்களை
ஒவ்வொரு Team ஆக பிரித்து வேலையை கொடுக்கின்றனர்
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு Team -என்ன வேலை செய்திருக்கிறது
என்பதில் தொடங்கி இப்போது செய்து கொண்டிருக்கும் பிராஜெக்ட்-ன்
செயல்முறை நிலை என்ன என்பது வரை அனைத்தையும் நமக்கு
ஆன்லைன் மூலமே தெரிவிப்பதற்காக இத்தளம் உள்ளது. இத்தளத்திற்கு
சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் நிறுவனத்தில்
வேலை செய்யும் நபர்களை ஒவ்வொரு Team ஆக பிரித்து
வேலையை கொடுக்கலாம், பிராஜெக்ட்-ன் அப்போதை Status பற்றிய
அனைத்து விபரங்களையும் ஒருவர் அப்லோட் செய்வதன் மூலம்
நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். Graphic வடிவில் வரைபடமாக
கொடுத்திருப்பதால் எளிதாக புரிந்து கொள்ளலாம். இதைத்தவிர
இன்னும் பல சேவைகளை இத்தளம் அளிக்கிறது கண்டிப்பாக
இந்தப்பதிவு சிறு தொழிலதிபர்களுக்கும் நேரமேலாண்மை விரும்பும்
நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz