கூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் பற்றிய பதிவில் கொசுறு செய்தியாக "உங்கள்
தளத்திலேயே, ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவிற்கு இணைப்பு கொடுத்தால்,
அதுவும் கொடுக்கப்பட்ட பதிவிற்கு Backlink ஆகும். ஆனால் ஒரே பதிவிலேயே
அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள்"
என்று தெரிவித்திருந்தேன். அது பற்றி சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களும்,
சகோதரி அஸ்மா அவர்களும் கேள்வி கேட்டிருந்தனர். அதன் பிறகு இணையத்தில்
மீண்டும் தேடினேன். அப்பொழுது கிடைத்த தகவல்கள் தான் இப்பதிவு.
அதைப்பற்றி படிப்பதற்கு முன்பு, பின்னிணைப்புகள் (BackLinks) பற்றிய பதிவில் ப்ளாக்கர் நண்பனுக்கு கூகிள் பின்னிணைப்புகள் எதுவும் காட்டவில்லை என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதை பற்றி கூகிளிடம் கேட்டதற்கு “நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு, ஸ்ட்ரிக்டு, ஸ்ட்ரிக்டு” என்று சொன்னது. அதாவது தேடுபொறியில் சில BackLinks மட்டுமே காட்டுமாம். முழுவதுமாக பார்க்க வேண்டுமெனில் கூகிள் வெப்மாஸ்டர் தளத்திற்கு சென்று பார்க்க சொன்னது.

சிறு விளக்கம்:
Internal Links –
நம்முடைய தளத்திற்குள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு
கொடுக்கப்படும் இணைப்புகள். (இதைப் பற்றி தான் தற்போது பார்க்க
இருக்கிறோம்)
Inbound Links or BackLinks – மற்ற தளங்களில் இருந்து நமது தளத்திற்கு கொடுக்கப்படும் இணைப்புகள்.
External Links or Outbound Links – நம்முடைய தளத்திலிருந்து மற்ற தளங்களுக்கு கொடுக்கப்படும் இணைப்புகள்.
Internal Links:
நம்முடைய தளத்தில் உள்இணைப்புகள் கொடுப்பதன் மூலம் சில நன்மைகள் இருக்கின்றன. வாசகர்களை நமது தளத்தில் அதிக நேரம் செலவிடவும், பக்க பார்வைகளை (Page Views) அதிகப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் பின்னிணைப்புகள் அதிகரிப்பதால் தேடுபொறிகளில் அதிக மதிப்பு பெற முடியும்.

உள்இணைப்புகளை அதிகப்படுத்த சில வழிகள்:
1. தள வரைபடம் (SiteMap) வைப்பது
இதை பற்றி பதிவுகளை பட்டியலிடுவது எப்படி? என்ற பதிவில் பார்க்கவும்.
2. தொடர்புடைய பதிவுகள் சாளரம் (Related Posts Widget) வைப்பது
இதைப் பற்றி பிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி?
என்ற பதிவில் சொல்லியிருந்தேன். முன்பு நன்றாக வேலை செய்தது, ஆனால்
தற்போது அதில் ஏதோ பிரச்சனை உள்ளது. இறைவன் நாடினால் சரி செய்ய
முயற்சிக்கிறேன்.
3. பிரபல பதிவுகள் சாளரம் (Popular Posts Gadgets) வைப்பது
இதனை
வைக்க Blogger DashBoard => Layout பகுதிக்கு சென்று Add a Gadget
என்பதை க்ளிக் செய்து, Popular Posts Gadget-ஐ தேர்வு செய்து வைக்கவும்.
4. தொடர் பதிவுகள் எழுதுவது -
இதன் மூலம் ஒரு பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு இணைப்புகள் கொடுக்கலாம். உதாரணம், நமது பிளாக்கை பிரபலப்படுத்துவது எப்படி?, தேடுபொறி ரகசியங்கள் போன்ற தொடர் பதிவுகள். ஆனால் அதிகமாக தொடர் பதிவுகள் எழுதினால் வாசகர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம்.
5. பதிவுகளில் இணைப்புகள் கொடுப்பது
இந்த
பதிவில் கொடுத்திருப்பது போல நீங்கள் எழுதும் பதிவுகளில் உள்ள வார்த்தைகள்
தொடர்பாக வேறு பதிவுகள் இருந்தால் அந்த பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்.
கவனிக்க: ஒரு பக்கத்தில் உள்இணைப்புகள் (Internal Links) மற்றும் வெளிஇணைப்புகள் (External Links) அனைத்தையும் சேர்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில்
இருக்குமாறு கூகிள் சொல்கிறது. மற்றவர்கள் குறிப்பிட்ட எண் என்பது நூறு
என்கின்றனர். அப்படி அதிகமானால் தேடுபொறிகள் அந்த பக்கத்தை கணக்கில்
எடுத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படலாம்.
No comments:
Post a Comment