Tuesday, 19 March 2013

தேடுபொறி ரகசியங்கள்: சில காரணிகள்

நமது தளத்தை தேடுபொறிகளில் முன்னணியில் கொண்டுவர வேண்டுமெனில், அதற்காக சில வேலைகளை நாம் செய்ய வேண்டும். அது தொடர்பாக இதுவரை நான்கு பதிவுகள் எழுதியிருந்தேன். மேலும் சில விசயங்கள் ஒரு பதிவு எழுதும் அளவிற்கு இல்லாததால் அவற்றை ஒரே பதிவாக எழுதுகிறேன்.



பேஜ்ரேங்க் (PageRank):



தேடுபொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணிகளை பயன்படுத்துகிறது என்று பார்த்தோம் அல்லவா? கூகிள் தளமும் பல்வேறு காரணிகளை பயன்படுத்துகிறது. அவற்றில் ஒன்று பேஜ்ரேங் (PageRank or PR). இது பல்வேறு காரணிகளை கொண்டு நமது வலைப்பக்கத்தை மதிப்பிடுகிறது. கவனிக்க: உங்கள் வலைத்தளத்தை(Website) அல்ல, வலைப்பக்கத்தை(Webpage).

அலெக்ஸா ரேங்கில் நமது ஓட்டு மொத்த தளத்திற்கும் ஒரே மதிப்பு தான். ஆனால் கூகிள் பேஜ்ரேங்கில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு மதிப்பு. இந்த மதிப்பு ஒன்று(1/10) முதல் பத்து (10/10) வரை இருக்கும். ஒன்று என்பது குறைந்த மதிப்பு, பத்து என்பது அதிக மதிப்பு.

இது பற்றி கூகுள் கூறும்போது, "பேஜ்ரேங் பற்றி கவலைப்பட வேண்டாம். இது கூகிள் கையாளும் இருநூறுக்கும் மேற்பட்ட காரணிகளில் ஒன்றாகும். அதனால் மற்ற விசயங்களில் கவனம் செலுத்துங்கள்" என்கிறது. அதனால் நானும் இதனை பற்றி கவலைப்படவில்லை. பூஜ்ஜியத்தில் இருந்த ப்ளாக்கர் நண்பன் தளத்தின் பேஜ் ரேங் மதிப்பு ஒரு வருடத்திற்கு பின் தற்போது பத்துக்கு ஒன்று பெற்றிருக்கிறது.

உங்கள் தள மதிப்பை அறிய வேண்டுமெனில் http://www.prchecker.info/ என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்.

ப்ளஸ் ஒன் பட்டன் (Google +1 button):



தற்போது கூகிள் சேர்த்திருக்கும் காரணிகளில் ஒன்று ப்ளஸ் ஒன். எத்தனை நபர்கள் +1 செய்திருக்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடுகிறது. அதிகமான நபர்கள் ப்ளஸ் செய்திருந்தால் அந்த பக்கத்திற்கு அதிக மதிப்பளிக்கிறது.

துள்ளல் விகிதம் (Bounce Rate):



அலெக்ஸா உள்பட தேடுபொறிகள் அனைத்தும் நமது தளத்தை மதிப்பிட பயன்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று துள்ளல் விகிதம் எனப்படும் Bounce Rate. இது நமது வாசகர்கள் நமது தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கணக்கிடுகிறது. நமது தளத்திற்கு வரும் வாசகர்கள், நமது தளத்தில் வேறு பக்கங்களை பார்க்காமல் வெளியேறினால், அது துள்ளல் (Bounce) ஆகும். அதனுடைய விகிதத்தை கணக்கிடுவது துள்ளல் விகிதம் (Bounce Rate) ஆகும்.

கணக்கிடும் முறை: 

                                       க்ளிக் செய்யாமல் சென்ற வருகையாளர்கள்
  துள்ளல் விகிதம் =    _____________________________________
                                                     மொத்த வருகையாளர்கள்

வாசகர்கள் அதிக நேரம் செலவிட்டால் விகிதம் குறைவாக இருக்கும். விகிதம் அதிகமாக இருந்தால் அதிகமான வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்தபின் உடனடியாக வெளியேறுகிறார்கள் என அர்த்தம் ஆகும். சராசரியான துள்ளல் விகிதம் 70 சதவிகிதத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருந்தால் உங்கள் தளத்தை ஆய்வு செய்ய வேண்டும். எப்படி செய்வது? கீழே உள்ள டிஸ்கியை படிக்கவும்.

துள்ளல் விகிதத்தை குறைக்கும் வழிகள்:

1. வெளிஇணைப்புகளை (External Links) குறைவாக வைத்திருப்பது

2. பாப்-அப்(Pop-Up) விண்டோக்கள் இல்லாமல் இருப்பது.

3. பதிவுகளிலும், Sidebar-லும் உள்இணைப்புகள் கொடுப்பது

4. உங்கள் பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைப்பது. (இதற்கு  தேவையில்லாத gadgets-களை நீக்கவும்)

-----------------------------------------------------------------------------------------------------------

இதுவரை தேடுபொறி ரகசியங்களின் அடிப்படைகளை மட்டுமே பார்த்தோம். ஏனெனில், எனக்கு அடிப்படைகள் மட்டுமே தெரியும்! :) :) :)

 வேறு ஏதாவது நான் அறிந்துக் கொண்டால், இறைவன் நாடினால் பின்னால் பகிர்கிறேன்.

டிஸ்கி: 
முதல் தொடர்பதிவான நமது பிளாக்கை பிரபலப்படுத்துவது எப்படி? தொடரை முடிக்கும்போதே, இனி தொடர்பதிவு எழுத வேண்டாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த தொடரை எழுதும் நிலை வந்தது. தற்போது நண்பர் ப்ரேம் அவர்களின் பரிந்துரைக்குப்பின் இன்னுமொரு தொடர் எழுதும் எண்ணம் உள்ளது. அது நமது வலைத்தளத்தை ஆய்வு செய்ய உதவும் கூகிள் அனாலிடிக்ஸ் பற்றியது. அந்த தொடர் எப்பொழுது எழுதுவேன்? என்று தெரியாது. அதுவரை ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவை படித்து முயற்சித்து பார்க்கவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz