Tuesday, 19 March 2013

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க


நம் தளத்திற்கு அதிகமான வாசகர்களை கொண்டுவர உதவி செய்வது திரட்டிகள் தான். திரட்டிகள் பற்றியும், அதன் ஓட்டுபட்டைகளை இணைப்பது பற்றியும் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற தொடரின் முதல் இரண்டு பகுதிகளில் பார்த்தோம். தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுப் பட்டைகள் இணைப்பது பற்றி மேலும் சில தகவல்களுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

முதலில் திரட்டிகளின் நிரல்களை பார்ப்போம்.

இன்ட்லி ஓட்டு பட்டைக்கான நிரல்:

<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'></script>



உலவு ஓட்டு பட்டைக்கான  நிரல்:

<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

தமிழ் 10 ஓட்டு பட்டைக்கான  நிரல்
<script type="text/javascript"> submit_url ="<data:post.url/>" </script> <script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button.php"> </script> 


யுடான்ஸ் ஓட்டுபட்டைக்கான நிரல்:
<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/>


இனி ப்ளாக்கில் எப்படி இதனை இணைப்பது? என்று பார்ப்போம்.

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அங்கு வலது புறம் மேலே Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

4. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.

<data:post.body/>

இந்த நிரல் உங்கள் பதிவு உள்ளடக்கத்திற்கான (Content) நிரலாகும். தற்போதைய ப்ளாக்கர் மாற்றங்களினால் இந்த நிரல் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இருக்கும். அதனால் ஓவ்வொரு நிரலுக்கும் பின்னால் மேலே உள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்களை Paste செய்து பார்க்கவும்.

கடைசியிலிருந்து முயற்சிக்கவும். அதிகமான டெம்ப்ளேட்களில் கடைசி நிரல் தான் சரியான நிரலாக இருக்கும்.

5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

உதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இணைத்துள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்கள் (ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ் சேர்த்து):

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/> <script src='http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share' type='text/javascript'/> <a class='twitter-share-button' data-count='vertical' href='http://twitter.com/share'>Tweet</a><script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'/> <g:plusone size='tall'/> <script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/> <script src='http://tamil10.com/submit/evb/button.php' type='text/javascript'> </script>  <script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/> </b:if>

*** ஓட்டுப் பட்டைகள் முகப்பு பக்கத்தில் தெரிய வேண்டாம் என நினைத்தால் மேலே உள்ள நிரலில் சிவப்பு நிறத்தில் உள்ள முதல் வரியையும், கடைசி வரியையும் சேர்க்கவும்.

 நிரலை சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். ஏதாவது ஒரு எழுத்து விடுபட்டாலும் பிழை என்று காட்டும்.

நீங்கள் முகப்பு பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை ரீட்மோர் மூலம் வைத்திருந்தால், ஓட்டுபட்டைகளை முகப்பு பக்கத்தில் தெரியாதவாறு வைக்கவும். இல்லையெனில் உங்கள் தளம் லோட் ஆக அதிக நேரம் எடுக்கும்.

டிஸ்கி: இந்த நிரல்களுக்கு பதிலாக பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு என்ற பதிவில் உள்ள மாற்றி அமைக்கப்பட்ட நிரல்களை பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz