Monday, 12 August 2013

கேன்சரை தடுக்கும் பழங்கள், காய்கறிகள்

மாம்பழம்: இதில் பீட்டாகரோட்டின், வைட்டமின் `சி' செலீனியம், குயர்செடின், கந்தகம், கால்சியம் உள்ளன. மார்பகப் புற்று, குடல் புற்று, நுரையீரல் புற்று, ரத்தப்புற்று, புராஸ்டேட் புற்று, கருப்பை வாய்ப்புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 170 மிகி/ 100 கிராம் உள்ளது.

வாழைப்பழம்: இதில் நார்ச்சத்து, கால்ஷியம், வைட்டமின் சி, கரோட்டின், கந்தகம், ஹிஸ்ட்டிடின், பைரிடாக்ஸின், மெதியோனைன் (அமினோ ஆசிட்) உள்ளன. ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அளவு 30மிகி/ 100கிராம் பைரிடர்க்ஸின் மற்றும் மெதியோனைன் உள்ள வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக் குறைவு என்கிறது ஓர் ஆய்வு.

மாதுளம் பழம்: இதில் நார்ச்சத்து, கால்ஷியம், வைட்டமின் `சி' கந்தகம் பாலிடெண்ட்ஸ், ஐசோபிளேவோன்ஸ் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடென்டு அளவு 135மிகி/100கி உள்ளது. நுரையீரல், புராஸ்டேட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதாக சொல்லப்படுகிறது.

திராட்சை: இதில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி', கரோட்டின், எலாஜின் ஆசிட், காஃபெயக் ஆசிட் உள்ளன. இதன் பழத்தோலில் ஆந்தோசையானின்கள் மற்றும் ரெஸ்வெரட்ரால் உள்ளன். ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அளவு 85மிகி/100 கிராம் உள்ளது. ரெஸ்வெரட்ரால், குடல் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

இதன் விதையிலும் இச்சக்தி உள்ளது. டானின் என்ற பாலிபெனால் திராட்சை தோல் மற்றும் விதையில் உள்ளது. கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. குயர்செடின் கருப்பு திராட்சையிலும், காய்ந்த திராட்சையிலும் உள்ளன. தினசரி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை திராட்சைப்பழம் மட்டும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த பெண் புற்றுநோயாளி ஒருவர், குணமடைந்ததாக மருத்துவ தகவல் கூறுகிறது.

பப்பாளி: இதில் நார்ச்சத்து, கால்சியம், கந்தகம், பீட்டாகரோட்டின், வைட்டமின் `இ' கிரிப்டோ சாந்தின், பெப்பைன், என்சைம் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 50 மிகி/ 100 கி உள்ளது. குடல் புற்று, புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

சீத்தாப்பழம்: இதில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி' உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 202மிகி/ 100கி உள்ளது. சீத்தாப்பழத்தின் மூலம் பலர் புற்றுநோயில் இருந்து குணம் அடைந்துள்ளதாக அறியப்படுகிறது. தொண்டை, குடல், ரத்தப்புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

கொய்யா: வைட்டமின் `சி' , நார்ச்சத்து, கால்சியம், லைகோபீன் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 496மிகி/100கி உள்ளதால் புற்றுநோய்கள் வரால் தடுக்கிறது.

எலுமிச்சம்பழம்: நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி' பீட்டா கரோட்டின், லிமோநீன், ஃபர்ரோகௌ மரைன்ஸ், ஃபளேவோனால்க்ளை கோசைட்ஸ், சிட்ரிக் ஆசிட், மாலிக் ஆசிட், பொட்டாசியம் சிட்ரேட் உள்ளதால் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

புற்றுநோயைக் குறைக்கும் காய்கறிகள்:

உருளைக்கிழங்கு: புற்றுநோயை எதிர்க்கும் பொருள் தோலின் உட்பாகத்தில் இருப்பதால் உருளைக்கிழங்கைத் தோலுடன் சாப்பிட வேண்டும். பேபி பொட்டேட்டோ என்று அழைக்கப்படும் உருண்டையான சிறிய ரக உருளைக்கிழங்கு சிறந்தது.

பாகற்காய்: செயின்ட்லூயிஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பாகற்காய்சாறு மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமின்றி புற்றுநோய் செல்களைப் பெருக்கமடையாமல் தடுக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர். கருவுற்ற பெண்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் பாகற்காய் உண்பதைத் தவிர்க்கவும்.

வெங்காயம்: வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் அதிகம் பயன்படுத்தினால் வயிற்றுப்புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.

தக்காளி: ஆண்கள் வாரம் பத்துமுறை தக்காளி சாப்பிட்டால் புராஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து 45% குறைவு என்றும், வாரம் 7 முறை சமைக்காமல் சாப்பிட்டால் குடல் மற்றும் வயிற்றுப்புற்று நோய் வரும் ஆபத்து 60% குறைவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தக்காளியில் உள்ள லைகோபீனின் சக்தியானது , கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு சமைத்தால் அதிகரிக்கிறது. புராஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. செல்களைக் கொல்லவும் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி நுரையீரல், வயிறு, வாய், குடல், மலக்குடல் புராஸ்டேட் புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.

முட்டைகோஸ்: கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று வராமல் தடுக்கிறது. கீமோதெரபியுடன் முட்டைகோஸ் சாற்றை, புரோகோலி மற்றும் காலிஃபிளவர் சாற்றுடன் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். முட்டைக்கோஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வர கணையப் புற்றுநோய் வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கந்தகமும், ஹிஸ்டிடின் அமினோ அமிலமும் நோயைத் தடுப்பதாகச் சொல்கிறது மற்றொரு ஆராய்ச்சி.

சாலட்: வெங்காயம், காரட், வெள்ளரி, தக்காளி சாலட் சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு உணவு ஆகும். பெண்கள் கருவுறுவதற்கு முன்பும் (சுமார் 6 மாதம் முதல் 1 வருட காலத்துக்கு) கருவுற்ற காலத்திலும், குழந்தைக்குப் பால் கொடுக்கும் 6-18 மாத காலத்திலும் புற்றுநோய் எதிர்ப்பு உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு வருவதுடன் மற்ற அறிவுரைகளையும் கடைப்பிடித்து வந்தால் குழந்தைகளுக்கு மூளைக்கட்டி வருவதையும், அது புற்றுநோய் கட்டியாக மாறுவதையும், ரத்தப் புற்றுநோய் போன்றவைகள் வருவதையும் தவிர்க்கலாம்.

அத்துடன் இவ்வகை உணவுகளைக் குழந்தைகள் சிறுவயதில் விரும்பிச் சாப்பிடுவார்கள். காரணம், அவர்களுடைய ஜீன்களில் அவை பதிவாகி விடுவதால் அந்த வகை உணவுகளை அவர்கள் விரும்புவார்கள். பரம்பரை புற்றுநோய்கள் என்று சொல்லப்படுகின்ற தைராய்டு புற்று, கணையப் புற்று, குடல் புற்று, சிறுநீர்ப்பை புற்று போன்றவற்றை நிச்சயம் வராமல் தடுக்கலாம்.

இனி, இந்நோய்களை வராமல் தடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz