Tuesday 23 April 2013

இந்தியாவின் புகழ் மிக்க இடங்கள் - Famous places in India

 ஆரோவில்: பாண்டிச்சேரி அருகாமையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் உதவியுடன் அமைந்துள்ள சர்வதேச நகராமாகும் இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.

காசி: உத்திரப் பிரதேசத்தில் உள்ளது. இது இந்துக்களின் புண்ணியத்தலம். காசி விஸ்வநாதர் ஆலயம். காசி இந்து பல்கழைக்கழகம் முதலியன இங்கு உள்ளது.

பிலாய்; மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்காலை மற்றும் BHEL(Bharat Heavy Electircal Ltd) உள்ளது.

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ளது. நடராசர் ஆலயம்மிகச் சிறப்பு வாய்த்து. இக்கோயிலின் கருவறை விமானங்கள் பொன் தகடுகளால் ஆனவை. அண்ணாமலைப் பல்கழைக்கழகம் இங்கு உள்ளது.

புலந்தர்வாசா: பதேபூர்சிக்ரியிலுள்ள உயரமான வாசலாகும். இது அக்பரால் தக்காண வெற்றியைக் கொண்டாட கட்டப்பட்டது.

பரிதாபாத்: டெல்லிக்கு அருகிலுள்ள தொழிற்கூடங்கள் நிறைந்த நகரம்.

தண்டி: காந்தி உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இது குஜராத் மாநிலத்தில் உள்ளது.

ஹரித்துவார்: இந்துகளின் புண்ணியத்தலம்,, இது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது.

கோல்கொண்டா: ஹதாராபாத்திற்கு அருகில் உள்ள நகரம் இது. மிங்கு முன்பு ஒரு வைரச்சுரங்கள் இருந்தது.

இந்தியா வாசல்: குடியரசுத் தலைவரின் மாளிகையை நோக்கிக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம்.

ஜாலியன் வாலாபாக்: அமிர்தசரசில் உள்ள ஒரு இடம். இங்கு 1919 ல் ஜெனரல் டயர் என்பவரால் பல தேச பக்தவர்கள் சுடப்பட்டு இறந்தனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

ஜூம்மா மசூதி: இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதி இதுவாகும். டெல்லியில் இருக்கும் இந்த மசூதியைக் கட்டியவர் ஷாஜகான்.

ஜோக் நீர்வீழ்ச்சி: இந்தியாவிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி. 830 அடி உயரம்கொண்ட இந்த நீர்வீழ்ச்சி உள்ள இடம் கர்நாடகா.

ராஜ்காட்: இங்கு காந்தி சமாதி உள்ளது. டெல்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் இச்சமாதி அமைந்துள்ளது.

குருஷேத்திரம்: இப்போது பானிபட் என அழைக்கப்படுகிறது. இங்குதான் மகாபாராத போர் நடைபெற்றது.

கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. விவேகானந்தர் பாறை, குமரி அம்மன் ஆலயம், திருவள்ளுவர் சிலை போன்றவை இங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடங்களாகும்.

பாடலிபுத்திரம்: தற்போது பாட்னா என்று அழைக்கப்படுகிறது. பீகாரில் உள்ள இந்நகரம் மௌரியர்களின் தலைநகரமாக இருந்தது.

மகாபலிபுரம்: சென்னைக்குத் தெற்கே 30 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் அழியாப் புகழ்பெற்று விளங்குகின்றன. இதன் அருகில் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் ஒன்று இயங்குகிறது.

நாளந்தா: இங்கு நாளந்தா பல்கலைக்க்ழகம் சிறந்து விளங்கியது. இது பீகாரில் உள்ளது.

போர்பந்தர்: காந்தி பிறந்த இடம். குஜராத்தில் உள்ளது.
சபர்மதி: காந்திய நிறுவிய ஆசிரம்ம் இது தாழ்த்தப்பட்டோருக்காக கட்டப்பட்டது.

சாஞ்சி: புகழ்மிக்க புத்தி ஸ்தூபி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இது உள்ளது.

சாரநாத்: இங்குதான் புத்தர் தனது ஞானக் கொள்கைளை முதன்முதலாக பரப்ப ஆரம்பித்தார்.

ஸ்ரீரங்கப்பட்டினம்: மைசூர் அருகில் உள்ளது. திப்பு சுல்தான் மூன்றாம் மைசூர் போரில் வீர மரணம் அமைந்த இடம்.

சாந்தி நிகேதன்: தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இங்கு உள்ளது. இது மேற்கு வங்காளத்தில் உள்ளது.

திரிவேணி: இங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்று சேருகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா இங்கு கொண்டாடப்படுகிறது. இது உத்திரபிரதேசத்தில் உள்ளது.

தும்பா: இந்தியாவின் விண்வெளித்தலம். திருவனந்தபுரம் அருகே உள்ளது.
தாஜ்மகால்: ஹாஜகான் தனது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக்க் கட்டியது. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஸ்ரீ ஹரிக்கோட்டா: ஆந்திரபிரதேசத்திலுள்ள இடம். இந்தியாவின் செயற்கைக்கோள் ஏவப்படும் இடம்.

சிசுந்தரா: அக்பரின் சடலம் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது. இது உத்திரபிரதேசத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz