http://anbhudanchellam.blogspot.in/2012/07/remote-desktop-connection.html
Team Viewer மூலம்
ஒரு இடத்தில் இருக்கும் கணினியை இன்னொரு இடத்தில் எப்படி Access செய்வது
என்று பார்த்து இருந்தோம். இதே செயலை ஒரே Network-இல் இருக்கும்
கணினிகளுக்கு எந்த மென்பொருளும் இல்லாமல் செய்வதற்கு உதவுவது Remote
Desktop Connection. எப்படி அதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
இதை செய்ய Access செய்யப்போகும் கணினியில் User Name, Password, IP போன்றவை தெரிந்து இருக்க வேண்டும்.
Windows XP
1. Start Menu >>All Programs>> Accessories >> Remote Desktop Connection என்பதை ஓபன் செய்யவும்.
2. இப்போது குறிப்பிட்ட கணினியில் IP-ஐ அதில் தரவும்.
3.
கொடுத்து விட்டு Connect என்பதை தரவும். இப்போது Remote Desktop ஓபன்
ஆகும். அதில் User Name மற்றும் Passowrd கொடுத்து நுழைந்து விடலாம்.
4. அவ்வளவு தான் இனி அந்த கணினி உங்கள் திரையில் ஓபன் ஆகிவிடும்.
5. இதை முழு திரையிலும் Maximize செய்து பார்க்க முடியும். Minimize செய்ய Cursor-ஐ திரையின் மேலே கொண்டு செல்ல வேண்டும்.
Windows 7 & Vista
Windows 7 & Vista பயனர்கள் இதை செய்வதற்கு Remote Desktop-ஐ ON செய்திருக்க வேண்டும்.
Right Click on My Computer >> Choose "Properties" அதில் Remote Settings என்பதை கிளிக் செய்யவும். இப்போது வரும் விண்டோவில் கீழே உள்ளது போல தெரிவு செய்யவும்.
இப்போது
Start Menu-வில் Remote Desktop Connection வசதி வந்து விடும். அதை கிளிக்
செய்து நீங்கள் Connect செய்திட இயலும். இதற்கும் மேலே உள்ள வழிமுறை
தான்.
இதை அலுவலகம், ப்ரௌசிங் சென்டர் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment