Tuesday, 19 March 2013

Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?

கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின் விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும் கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLHL3Qv2bfXaQPDv32tCsjdvPYj4Cemz1i3mkqtEQXUzTMrt86D9NTp2CvI3CkiqqlKMacEk8KEUkWvf0zTE-kw1pQYn8clflMVGoTy3F1ofsJxfTN-12091ij3pjZygh2DNBQ3_S3sBU/s200/Picture1.jpg
நான் முன்னர் எழுதிய Custom Domain குறித்த பதிவுகளுக்கு நிறைய பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியுமா என்று கேட்டனர், நான் அப்போது கூறிய பதில் ஆம். ஆனால் நண்பர்  தமிழ்கிழம்  ஜெயச்சந்திரன் அதெல்லாம் தேவை இல்லை, நான் அவை இல்லாமல் வாங்கி உள்ளேன் என்று சொன்னார்

தமிழ் பதிவுலகத்துக்கு புதியவரான அவர் இதோ என் வலைப்பூவில் முதல் முறையாக Guest Post எழுதி உள்ளார். இது நிறைய பேருக்கு கண்டிப்பாய் தேவைப்படும் ஒன்று. இதோ பதிவு அவரின் நடையில்


அன்பு வாசகர்களுக்கு தமிழ்கிழத்தின் கனிவான வணக்கங்கள். பல இடங்களில் தமிழர்களின் மூளை விரயமாவதைத் தவிர்க்கதமிழர்களின் ஒற்றுமையை நிலை நாட்ட முதல் முயற்சியாக இன்று நண்பர் பிரபு கிருஷ்ணா அவர்களின் வலைப்பூவில் முதல் முறையாக விருந்தினர் பதிவு எழுத வந்திருக்கும் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இன்றைய பதிவுக்கு செல்வோமா...


நம்மில் பலருக்கு Custom Domain வாங்க வேண்டும் என்று வெகு நாள் ஆசைப்பட்டிருப்போம். ஆனால் online purchase-இல் இருக்கும் சிக்கல்களினாலோ அல்லது credit/debit கார்டு இல்லாத காரத்தினாலோ அதை வாங்காமல் இருந்திருப்போம்.மேலும் google மூலம் வாங்க விரும்பினால் Debit கார்டு-டெல்லாம் செல்லாது,கண்டிப்பாக international credit கார்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நான் சொல்லப்போகும் வழிமுறையை பயன்படுத்தி எந்த ஒரு சிக்கலும் இன்றி நீங்கள் விரும்பிய domain- offline-இல் bigrock மூலம் சுலபமாக வாங்கலாம் (பல registrar-கள் offline முறையை வைத்திருந்தாலும் நான் பரீட்ச்சயப்பட்டது bigrock-இல் தான்).

முதலில் www.bigrock.in சென்று உங்கள் domain பெயரை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கணக்கு இல்லயேல் புதிதாக ஒரு கணக்கு துவங்கிக்கொள்ளவும். அதன் பின்னர் உங்கள் bigrock வலைதளத்தில் Select Your Payment Method என்ற இடத்தில் தங்கள் நாட்டை தேர்வு செய்து pay offline என்பதை சொடுக்கவும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmGLPMz2dpEPHqHsx9hQW0WpaYNlpnQfCOV9Nqf-JDgwyJax0arn58jfJPcKZhn4Wf8EJuveZbjy0y8RQRIpM8ly1VQaUQ41G-g7RG2rZySWxaCzG1njjFPVzwwSY4lU-iw0PKTrG_61c/s320/custom+domain.jpg


இந்தியா-விற்கு மட்டும் 

அதன் பின்னர் ICICI/HDFC வங்கிக்கு சென்று பின் வரும் அக்கவுண்ட்-இல் கட்ட வேண்டிய பணத்தை மட்டும் கட்டினால் போதும்.

I] Direct Deposit into our ICICI Bank Account

Beneficiary Name: BigRock Solutions Private Limited

Account No:001105021339 

Branch: Andheri (West), Mumbai

அல்லது 

II] Direct Deposit into our HDFC Bank Account

Beneficiary Name: BigRock Solutions Private Limited

Account No:00192320004842 

Branch: Versova, Mumbai

என்ற கணக்கில் பணம் காட்டலாம். பணத்தை கட்டிவிட்டு அந்த receipt- scan செய்து (அட அதெல்லாம் வேண்டாம் தோழா, சும்மா உங்க கைப்பேசி camera-விலே போட்டோ எடுத்து அனுப்புங்க போதும்billing@bigrock.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அதன் பிறகு http://support.bigrock.in -க்கு சென்று ஒரு Submit A Ticket--Billing--> இதில் 

உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, Type (Billing And Payments), Subject (Funds Remittance என்று கொடுக்கவும்), பின்னர் கீழே பணம் கட்டியதன் தகவல்களை பதிவு செய்து விட்டால் அவ்வளவு தான் உங்கள் domain சற்று நேரத்தில் வேலை செய்யத்துவங்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4EV9K-eo1xfwt9Gi8SJxf3NxDXdmRFtELEJyE0UfcsCIXEmPwk9oBC1is-ehtJyAIHc3nSd0eD3wetvpKcrkm4FwdO1P43RcZGzw8EKzWZct1t9E2cT49OMjHN6avarhMvbmGbUOzhME/s400/Support.jpg

அதுவும் பிடிக்கவில்லயா?

மும்பையில் மாற்ற முடிந்தவாறு Cheque/Pay Order/Demand Draft எடுத்து பின் வரும் தகவல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புங்கள் (இது கொஞ்சம் எரிச்சல் தரும் வேலை தான், அதனால் மேலே உள்ள வழியையே பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம்) Customer Username (Email Address) or Customer ID.


Name on the Cheque: BigRock Solutions Private Limited


Address :

Acme ITech Park

Old Nagardas Road, 

Next to Andheri Subway, 

Andheri (East), 

Mumbai, 400 069, 

India.

மேலே உள்ள முதலாம் வழியை பயன்படுத்தி நான் www.techneem.com (ரூ499/-) மற்றும் www.techneem.in (ரூ.99/-) என்ற இரண்டு domain-களை எந்த சிக்கலும் இன்றி வாங்கியுள்ளேன்.

நீங்கள் BigRock தளத்தின் மூலம் வாங்கிய டொமைனை பிளாக்கர்க்கு பயன்படுத்த சில மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். உங்கள் டொமைன் activate ஆன பிறகு


 BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

என்ற இந்த பதிவின் மூலம் மாற்றங்கள் செய்து கொள்ளவும்


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz