Tuesday, 19 March 2013

உங்கள் தளம் லோட் ஆகும் நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொரும் தங்கள் தளம் விரைவில் லோட் ஆக வேண்டும், வாசகருக்கு அதிக நேரம் லோட் ஆகி தொல்லை தரக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சில கோடிங், படங்களை சேர்க்கும் போது லோட் ஆக அதிக நேரம் ஆகலாம். இந்த மாதிரி விசயங்களில் முதலில் நமக்கு எது பிரச்சினை என்று தெரிய வேண்டும். அதை எப்படி கண்டுபிடிப்பது?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirRiBQRhUkbn8JVN9K1yqPTEc2vFFBVX6pN2S9KrFIFTtBNPmaAAih6YmMqezgDOhLPVJ3KxXkrQe_1gSXoLREBI_xIRQRVI9TMnoxyX2rg8pl9pQJqGuGOUgzOJ2n6AKMOpShxl9FeWQ/s200/waiting.jpg

என்ற இந்த தளத்திற்கு முதலில் செல்லுங்கள். இதில் குறிப்பிட்ட தளம்/ பக்கம் போன்றவற்றின் URL தரவும். சில நொடிகள் அது Test செய்யும். இப்போது கீழே உள்ளது போல குட்டி Box மற்றும் அதற்கு கீழே மற்ற பல விஷயங்கள் வரும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmehxaGeWt8ZHd8VTTeFFe6r_4c6FWVaLG8N9-uljYrxYt7ob2dRPoTbJyV311wn3XgVDS17xG7QuEqLbc61gRSuolHz5thn5EBenlw2j9xs6wZlK4Cp_inqqDrqxUMQyRPI5rx9ie5To/s1600/Karpom+test.jpg

இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தான் உங்கள் தளம் லோட் ஆகும் நேரம், மற்றும் ஏன் அவ்வளவு நேரம், எவை அதிக நேரம் எடுக்கின்றன என்று சொல்லும். Loading Time உங்கள் இணைய வேகத்தை பொறுத்து. ஆனால் File Size போன்றவை எல்லோருக்கும் பொதுவானவை.

இது வலைப்பூவுக்கு மட்டுமல்ல Host செய்யும் தளங்கள், மற்றும் அதிக படங்கள் கொண்ட தளங்கள், என்று இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு தளமும் கவனிக்க வேண்டிய விஷயம், பயன்படுத்த வேண்டிய வசதி

இதில் நான்கு பிரிவுகள் உள்ளன, அவற்றை விரிவாக காண்போம்.

WaterFalls

இந்தப் பகுதி தான் நீங்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது

இது உங்கள் தளத்தில் உள்ள Files மற்றும் அவை லோட் ஆகும் நேரம் லோட் ஆகும் நேரத்தில் அவை என்ன செய்கின்றன என்று சொல்லும். படத்தை பார்க்கவும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhavX-9y5qgJhvUBkJIJONDA8tuce09rKeMm0SXW9Zkl7dOEazhBKojtxpGXi8fmGJFH12nswE2F0oQlVbMPSIiT_ULLfQtA5dHWmQMZ7Hri7OuAjqe9RH-po5YznPpA8buZ-R6T8ZBlWs/s320/state+colors.png

இதில் மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது மஞ்சள் நிறத்தில் உள்ள Wait என்பதை தான். இது அதிக ஒரு File-க்கு அதிகமாக இருந்தால் உங்கள் தள லோட் வேகத்தை அது குறைக்கிறது என்று அர்த்தம். அதே போல பச்சை நிறம், இது உங்கள் தகவல்களை பெறும் நேரத்தை குறிக்கும், இது File Size எவ்வளவு என்பதை பொறுத்து.

இதில் இவற்றை விட மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, உங்கள் File கள் என்ன size என்று. File-க்கு நேரே நேரே உள்ள Size என்ன என்று பாருங்கள், அதன் load Time எவ்வளவு என்று பாருங்கள், அதிகமாக உள்ளதை  தேவை என்றால் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் நீக்கி விடுங்கள்.

Performance Grade

இது உங்கள் தளம் பயனர்களுக்கு எப்படிப்பட்ட விதமாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்து வழங்கப்படும் மதிப்பெண் ஆகும். இதில் அதிக மதிப்பெண் இருத்தல் நலம்.

கோடிங் தெரிந்தவர்கள் அதில் கூறி உள்ள மாற்றங்களை செய்ய முயற்சிக்கலாம். இதன் மூலம் அதிக மதிப்பெண் கிடைக்கும், இது உங்கள் தளம் லோட் ஆகும் நேரத்தை தீர்மானிக்கும் என்பதை நினைவில் கொள்க.

Page Analysis

இது உங்கள் பக்கத்தை அலசி பார்க்கும் செயலாகும், இதில் உள்ள தகவல்களில் முதலாவது URL குறித்தது. இதன் தகவல்கள் Server Response Code எனபதில் இருக்கும்.

அடுத்து Time, Size, Request போன்றவற்றை சொல்லும், இதை கவனித்து எது உங்கள் தளம் லோட் ஆகும் நேரத்தை அதிகமாக்குகிறது என்று பார்த்து தேவை இன்றி இருக்கும் File-களை நீக்க முயற்சி செய்யவும்.

History

இது நீங்கள் பார்த்த நேரங்களில் எப்போது உங்கள் எப்போது வேகமாக இயங்கியது, மெதுவாக இயங்கியது என்று சொல்லும்.

இந்த நான்கு பகுதிகளும் உங்கள் தளத்தை முழுவதும் அலசி ஆராய்ந்து தரப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்க.

இதில் நீங்கள் உங்கள் தளத்தின் குறிப்பிட்ட பதிவுக்கும் கூட எவ்வளவு நேரம் /Size என்று சோதிக்க முடியும்.

குறிப்பாக Web Hosting மூலம் இயங்கும் நண்பர்கள் இந்த வசதியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz