Tuesday, 26 March 2013

மருந்தாகும் சீரகத் தண்ணீர்

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சீரகத் தண்ணீர்

]
சராசரியாக
ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அந்த நீர் நன்கு
சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது குடிநீர் சுத்தமானதாக கிடைப்பதில்லை. இதனால் பல வகையான நோய்கள்
உண்டாகின்றது.
எனவே நீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும். அப்படி கொதிக்க வைக்கும் போது
அதில் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினால்
சிறுநீரகக் கோளாறு, நீர் சுருக்கு, உடல் சூடு, தலைமுடி உதிர்தல், தாகம், ஜலதோஷம்
போன்றவை நீங்கும்.
மேலும் நீரினால் உண்டாகும் நோய்கள் ஏதும் நம்மை நெருங்காது. இதற்கு காரணம் சீரக
நீர் உடலில் உள்ள அசுத்த நீரை வியர்வை சுரப்பி வழியாக வெளியேற்றுகிறது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz