Tuesday, 23 April 2013

போட்டோஷாப் மூலம் எளிய முறையில் கருப்பு வெள்ளையை கலராக்கலாம்!

உங்கள் பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை கலரில் மாற்றுவது எப்படி?

முதல்ல போட்டோஷாப்ல உங்களோட பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை திறந்து வெச்சுக்கோங்க...

ctrl+J அழுத்தி புதியதாய் திறந்த புகைப்படத்தின் டூப்ளிகேட் லேயரை உருவாக்கவும்..


டூப்ளிகேட் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்..

1. புகைப்படத்தில்  உள்ள சட்டையை செலக்ஷன் டூல் கொண்டு செலக்ட் செய்யவும்..!


2. நீங்க விரும்பின வண்ணத்தை அதற்கு கொடுங்கள்.. பெயின்ட் பக்கெட்டால்   தேர்வு செய்த பகுதியை நிரப்பவும்.

3. வண்ணத்தை நிரப்பிய பிறகு இவ்வாறு இருக்கும் நான் சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன்.



அப்புறம்  முகத்தை செலக்ஷன் டூல் கொண்டு செலக்ட் செய்யவும்...


அதற்கு தோலின் நிறம் கொடுக்கவும்.. நீங்கள் விரும்புகிற தோலின் நிறம் கொடுக்கலாம்.. (கலர்பேலட்டிலிருந்து தேர்வு கொள்ளவும்...)

நான் #FFCCC தேர்வு செய்துள்ளேன்.. பெயின்ட் பக்கெட் கொண்டு தேர்வு செய்யப்பட்ட முகப்பகுதியை  நிரப்பவும்..

இறுதியாக

உங்கள் புகைப்படம் இவ்வாறு ஜொலிக்கும்..! (பார்டர் வைத்து பேக்ரவுண்ட் கலரினை மாற்றியுள்ளேன்)

வித்தியாசத்தைப் பாருங்கள்..! கருத்தை கூறுங்கள்.. சந்தேகம் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz