Tuesday, 23 April 2013

எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள - Image குறி ஒட்டில் align, border மற்றும் HIGHT AND WIDTH பண்புகள்

HTML IMG TAG ATTRIBUTES
img tag attributes
இப்பதிவின் தொடர்ச்சியாக <IMG> குறிஒட்டில் பயன்படுத்தும் பண்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

ALIGN பண்பு

உங்களுடைய படம் வலைப்பக்கத்தில் எந்த இடத்தில் தெரிய வேண்டும் என்பதை <IMG> குறிஒட்டில் ALIGN பண்பில் கொடுக்க வேண்டும். இந்த பண்பிற்கு left, right, top, bottom மற்றும் middle போன்ற மதிப்புகளைக் கொடுக்கலாம்.
<IMG> குறிஒட்டில் ALIGN பண்பை கொடுக்காதபோது, உங்களுடைய படம் வலை உலவி சாளரத்தின் இடதுபக்க மேல் ஓரத்தில் காட்டப்படும்.

<IMG SRC="image name with path" ALIGN = "Left/right/top/bottom/middle">

இதில் Left/right/top/bottom/middle என்பதில் படமானது எப்படி அமையவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்.

இடது பக்கம் அமைய இவ்வாறு கொடுக்கலாம்.
<IMG SRC="image name with path" ALIGN = "Left">

BORDER பண்பு

படத்தைச் சுற்றிலும் எல்லைகளை அமைக்க BORDER பண்பு பயன்படுகிறது. Border பண்பில் பயன்படுத்தப்படும் மதிப்பு எல்லைகளின் தடிமனைத் தீர்மானிக்கிறது.

இதன் பொது வடிவம் 

<IMG SRC="image name with path" BORDER="Value">

இங்கு BORDER என்னும் பண்பு படத்துடன் சேர்க்கப்படும் எல்லைகளின் தடிமனைக் குறிக்கிறது.

HIGHT AND WIDTH பண்பு

<IMG> குறி ஒட்டில் height மற்றும் Width பண்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு படத்தின் உயரம் மற்றும் அகலத்தை நிர்ணயிக்க முடியும். படத்தின் உயரம் மற்றும் அகலத்தை புள்ளிகளில் (Pixels) கொடுக்கலாம். அல்லது சாளரத்தின் அளவில் எத்தனை சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கொடுக்கலாம்.

படத்தின் ஈரம் குறையாமல் இருக்க, அதன் உயர, அகல விகிதத்தை மாற்றக்கூடாது. நாம் ஏதேனும் ஒரு அளவைக் கொடுத்து படத்தின் அளவை மாற்றும் போது, மூலப் படத்தின் அளவு விகித்த்திற்கேற்ப மற்றொரு அளவு தானாகவே மாற்றப்படும்.

உங்கள் வலைப்பக்கதிற்குச் சரியாகப் பொருந்தக்கூடிய அளவுள்ள படத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் <IMG> குறி ஒட்டில் கீழ்க்கண்டவாறு பண்புகளைச் சேர்க்க வேண்டும்.

<IMG SRC="image name with path" HEIGHT= "pixels" WIDTH="pixels" >

ALT பண்பு

சில சமயங்களில் உங்கள் வலைப்பக்கங்களைப் பார்வையிடும் பார்வையாளர் உரையை மட்டும் காட்டும் உலவியைப் பயன்படுத்தலாம். அல்லது கோப்புகளை விரைவாகப் பார்வையிடுவதற்காக, படங்களைக் காண்பிப்பதைத் தடை செய்திருக்கலாம். இது போன்ற சமயங்களில் வலை உலவியானது படங்களைக் காட்டாது.

உலவித் திரை படங்களைக் காட்டாதபோது, அதற்குப் பதிலாக காட்ட வேண்டிய உரையை alt பண்பின் மூலம் கொடுக்கலாம். இந்த உரையானது நீங்கள் கொடுத்திருக்கும் படத்தைப் பற்றிய விளக்கமளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

பொதுவடிவம்: 

<IMG SRC = "image name with path" ALT = "Alternative text">

குறிப்பு: <IMG> குறி ஒட்டிற்கு முடிவுக் குறி ஒட்டு கிடையாது. இந்தக் குறி ஒட்டு <IMG> குறிஒட்டில் SRC என்னும் பண்பு கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த குறிஒட்டு <BODY></BODY> என்னும் குறிஒட்டிற்கு இடையில் பயன்படுத்தப்படுகிறது.

ஆவணத்தில் எத்தனைப் படங்களைச் சேர்க்க வேண்டுமோ, அதே எண்ணிக்கையில் <IMG> குறிஒட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்த பதிவில் HTML ஆவணத்தில் ஒலியைச்(AUDIO) சேர்க்கப் பயன்படும் குறிஒட்டான <BGSOUND> -ஐப் பற்றிப் பார்ப்போம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz