Wednesday, 13 March 2013

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? (இறுதி பகுதி)

http://anbhudanchellam.blogspot.in/2012/03/blog-post_5439.html


வாசக நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! ஒரு வரி கதையை இரண்டரை மணிநேர சினிமாவாக எடுப்பதைப்போல, ஒரு வரி செய்திகளை ஒவ்வொரு பகுதியாய் எழுதி வந்த "நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?" என்ற (தொடராமல் இருந்த) தொடர் இத்துடன் முடிவடைகிறது.

நமது ப்ளாக்கை பிரபலமாக்கும் வழிமுறைகளை இது வரை பகிர்ந்தேன். இந்த இறுதி பகுதியில் இரண்டு வழிமுறைகளை பகிர்கிறேன்.

பிரபலமாக்கும் பின்னூட்டங்கள்:


உங்கள் ப்ளாக்கை பிரபலமாக்க பின்னூட்டங்களும் ஒரு வழியாகும். அது உங்கள் ப்ளாக்கில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் இல்லை. மற்றவர்களின் ப்ளாக்கில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் ஆகும். சாதாரணமாக பின்னூட்டம் இடுவதை விட, அந்த பதிவு தொடர்பாக உங்கள் கருத்துக்களை சிறந்த முறையில், மற்றவர்களை கவரும்படியாக பின்னூட்டம் இட்டால், அந்த பிளாக்கிற்கு வருபவர்கள், உங்கள் ப்லாக்கிற்கும் வருவார்கள். இது மூலம் உங்கள் பதிவுலக நட்பு வட்டாரமும் விரிவடையும். நட்பு வட்டாரம் விரிவடைந்தால் உங்கள் ப்ளாக் பிரபலமாகும்.

குறிச்சொற்கள்:


Keywords, Tags, Labels என்றழைக்கப்படும் குறிச்சொற்கள் முக்கியமான ஒன்றாகும். இந்த குறிச்சொற்கள் தேடுபொறியில் நமது தளம் முன்னிலையில் வருவதற்கு பயன்படுகிறது. தேடுபொறியில் ஒருவர் ப்ளாக் என்று தேடினால், அந்த வார்த்தை இடம்பெற்ற தளங்கள் அனைத்தும் வந்துவிடும். இதனால் நாம் பதிவுகளில் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனத்தில் கொள்ள வேண்டும். Labels என்ற இடத்திலும் சரியான வார்த்தைகளை இட வேண்டும். உதாரணத்திற்கு "Blog" என்ற வார்த்தை. ஆங்கிலத்தில் தேடுபவர்கள் Blog என்று தேடுவார்கள். ஆனால் அதனையே தமிழில் தேடுபவர்கள் ஒரே மாதிரியாக தேட மாட்டார்கள். அதனால் தான் பிளாக்கர் நண்பன் தளத்தில் அதை  "ப்ளாக்", "பிளாக்", "வலைப்பதிவு", "வலைப்பூ" என்று வெவ்வேறு விதமாக எழுதியுருப்பேன்.  ஆனால் அதற்காக தமிழ் வார்த்தைகளை பிழையாக எழுதகூடாது.

தமிழ்மணம் பயனாளர்களுக்கு:

தமிழ்மணத்தில் பதிவுகளை பயன்படுத்துவோர் Labels பகுதியில் பின்வரும் குறிச்சொற்களில் ஏதாவதை தங்கள் பதிவுக்கு ஏற்றார்போல் கொடுக்கவும். அப்படி கொடுத்தால், தமிழ்மணம் தளத்தில் சாதரணமாக உங்கள் பதிவுகள் வருவதோடு மட்டுமல்லாமல், கீழ்வரும் குறிச்சொற்கள் சார்ந்த பகுதியிலும் உங்கள் பதிவு வரும்.

  ஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள், பொருளாதாரம், தொழில்நுட்பம்

மின்னஞ்சல் மூலம் பிரபலப்படுத்த:

##நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சல்களுக்கும் கீழே ஏதாவது எழுதி அனுப்பலாம். அதற்கு Email Signature என்று பெயர். அங்கு நாம் நமது ப்ளாக் முகவரியை கொடுத்தால், மின்னஞ்சல்களை பெறுபவர்கள் அதன் மூலம் நமது ப்ளாக்கிற்குவர வாய்ப்புள்ளது.

இறுதியாக:

மேலும் இந்த தொடரை தொடர்வதற்கு வார்த்தைகள் இடம் தராததால் இத்துடன் இத்தொடரை முடித்துக் கொள்கிறேன்.



தொடர் முற்றும். மற்றவை தொடரும்.....

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz