Monday, 11 March 2013

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இணைக்க முடியலையா?

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/09/how-to-add-tamilmanam-vote-button.html
புதியவர்களுக்கான பதிவு இது

வணக்கம் நண்பர்களே..!

பெருகி வரும் வலைப்பதிவர்கள்(new bloggers) தங்களுடைய வலைப்பூவை பிரபலப்படுத்தும் நோக்குடன் பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. முழுமுதற் பணியாக தங்கள் வலைப்பதிவை திரட்டிகளில் இணைக்கவேண்டும். அவ்வாறு திரட்டிகளில் இணைப்பதன் மூலம் அதிக வாசர்களை உங்கள் பதிவுகள் சென்றடையும்.

அவ்வாறான வலைத்திரட்டிகளில் முதன்மையானது தமிழ்மணம் வலைத்திரட்டி(Tamilmanam Aggregator ). தமிழ்மண வலைத்திரட்டியில் பதிவை இணைத்தும், அதற்குரிய ஓட்டுப்பட்டையை தளத்தில் இணைக்க முடியவில்லை என நண்பர் கடந்த பதிவில் கேட்டிருந்தார். இதுகுறித்து பல நண்பர்கள் முன்னரே சந்தேகம் கேட்டிருந்தனர். அவர்களுக்கும் புதியதாக வரும் வலைப்பதிவர்களும் அறிந்துகொள்ளும் நோக்கோடு இப்பதிவை எழுதியிருக்கிறேன்.

தமிழ்மணத்தின் ஓட்டுப்பட்டையை இணைக்க:

பதிவர் நண்பர் ஒருவர் தன்னுடைய வலைத்தத்தில் தமிழ்மண ஓட்டுப்பட்டையை இணைக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். நிறைய புதியவர்களும் இதையே என்னிடத்தில் அடிக்கடி கூறிவருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் சந்தேகத்தை தீர்த்து, அவர்களுடைய வலைத்தளங்களில் தமிழ்மணம் மற்றும் மற்ற ஓட்டுப்பட்டைகளை இணைத்துக்கொடுத்திருக்கிறேன். தற்போது அதிக நேரமும், மின்சாரமும் கிடைக்காத்தால் அந்த உதவிகளை நேரடியாக செய்ய முடியவில்லை.

வாசகர் கேட்ட சந்தேகத்திற்கு தமிழ்மணத்திலேயே தீர்வு வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ்மண தளத்தில் வலது பக்கப்பட்டையில் பாருங்கள்..

"ப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)"

இவ்வாறு ஒரு இணைப்பு இருக்கும்.

how to add tamilmanam vote button
அதில் சொடுக்கினால் அழகு தமிழில் உங்கள் பிளாக்கரில் ஓட்டுப்பட்டையை இணைப்பது எப்படி? என்பதை விளக்கியிருக்கிறார்கள்.

அதன்படி செய்யலாம்.

அதாவது உங்கள் பிளாக்கர் கணக்கில் உள்நுழைந்துகொள்ளுங்கள்.
அங்கு Design என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு Edit Html சொடுக்குங்கள்.

புதிய Interface பயன்படுத்துபவர்கள் Template==>Edit Html==>Proceed என்ற வழியில் உங்கள் Template நிரல் பெட்டியை அடையலாம்.

இப்போது உங்கள் பிளாக்கர் வலைத்தளத்தின் வார்ப்புரு நிரல் தோற்றமளிக்கும். அதில் Expand Template என்பதில் டிக் குறி ஏற்படுத்தவும். இப்போது கீழுள்ள நிரல்வரிகளை காப்பி செய்து தமிழ்மணத்தில் இருக்கும் பெட்டியில் பேஸ்ட் செய்யவும்.


பிறகு கீழிருக்கும் "அளி" எனும் பொத்தானை அழுத்துங்கள். பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் வார்ப்புரு நிரலில் தமிழ்மண ஓட்டுப்பட்டையும் இணைந்திருக்கும். இப்போது மீண்டும் அந்த பெட்டியில் உள்ள வார்ப்புரு நிரலை காப்பி செய்து, உங்கள் வலைத்தளத்தின் வார்ப்புரு நிரல் பெட்டியில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

இறுதியாக Save Template என்பதை கிளிக் செய்து, மாற்றத்தை சேமித்து விடுங்கள். இப்போது தமிழ்மண ஓட்டுப்பட்டை பதிவின் முகப்பில் தோற்றமளிக்கும். தேவைப்பட்டால் இந்த ஓட்டுப்பட்டையை நாம் இடமாற்றம் செய்து வைத்துக்கொள்ளலாம். அதாவது பதிவின் இறுதியில் வருமாறும் நிரல்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

தமிழ்மண ஓட்டுப்பட்டையை வலைப்பூவில் சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றி கீழிருக்கும் வீடியோவில் சொல்லியிருக்கிறேன். பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz