Monday, 11 March 2013

திரட்டிகளில் பதிவுகளை இணைப்பது எப்படி?

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/08/how-to-add-post-link-in-aggregators.html
 how to add post link in aggregators

வணக்கம் என் அபிமானத்திற்கு உரிய வாசக, வலைப்பூ நண்பர்களே...!

புதியவர்களுக்காக இப்பதிவை அர்பணிக்கிறேன். வலைத்திரட்டிகளில் தங்கள் வலைப்பூவை பதிவது எப்படி? புதிய இடுகைகளை திரட்டிகளில் இணைப்பது எப்படி, திரட்டிகளில் ஓட்டிடுவது எப்படி? இந்த கேள்விகளனைத்திற்கு உங்களுக்கு இப்பதிவில் விடை கிடைக்கும்.

நமது தங்கம்பழனி தளத்தில் திரட்டிகளைப் பற்றிய முந்தை பதிவுகள்:

1. முப்பதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் ஒரே இடத்தில்
2. திரட்டிகளை பயன்படுத்தும் விதம்
3. உங்கள் பதிவுகளை இணைக்க...

இப்பதிவில் பிரபலமாக உள்ள திரட்டிகளில் பதிவை இணைப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.

தமிழ்மணம்:

வலைப்பூவை இணைக்க:

தமிழ்மணத் தளத்தில் சென்று முதலில் உறுப்பினராகிக்கொள்ளுங்கள். அதற்கு இந்த இணைப்பில் சென்று வேண்டிய விபரங்களைக் கொடுக்கவும். தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

http://www.tamilmanam.net/login/register.php

உங்களது வலைப்பூ தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டதற்கான மின்னஞ்சல் ஓரிரு நாளைக்குள் உங்களை வந்தடையும். மின்னஞ்சலில் உள்ள சுட்டியைக் கிளிக் செய்து உங்கள் கணக்கை நீங்கள் செயற்படுத்தலாம்.

உங்கள் கணக்கு செயற்படுத்தப்பட்டவுடன், நீங்கள் உருவாக்கிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு தளத்தில் உள் நுழையலாம்.

தமிழ்மணத்திற்கான ஓட்டுப்பட்டையைச் சேர்க்க வேண்டும். இதற்கு தமிழ்மண தளத்திலேயே வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது அதன் படி செய்து பயன்பெறுங்கள்.

உங்கள் பயனர் கணக்கைப் பெற்ற பிறகு, உங்கள் வலைப்பூவில் ஓட்டுப்பட்டையை இணைத்துவிட்டீர்கள்.

இப்போது பதிவுகளை எப்படி இணைப்பது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் வலைத்தளத்தில் புதிய பதிவொன்றை எழுதி வெளியிட்டவுடன் பதிவின் மேலிருக்கும் தமிழ்மண ஓட்டுப்பட்டையில் உள்ள submit to tamilmanam என்ற பட்டனைச் சொடுக்கவும்.

இப்போது புதிய விண்டோ திறக்கும். அதில் உங்களுடைய தமிழ்மண பயனர் பெயர், கடவுச்சொல்லை உள்ளிட்டு தமிழ்மணத்தில் சேர் பட்டனை அழுத்தவும்.

இப்போது உங்கள் பதிவானது தானியங்கியாக தமிழ்மண வலைத்திரட்டியால் திரட்டப்படும். புதிய பதிவுகள் எத்தனை இருந்தாலும் ஒரே சொடுக்கில் அனைத்தையும் திரட்டிக்கொள்ளும் தமிழ்மணம். இதுதான் தமிழ்மணத்திலுள்ள சிறப்பான விடயம்.

இவ்வாறு தமிழ்மணத்தில் பயனர் கணக்கை உருவாக்கி, கணக்கை செயற்படுத்தி, பிறகு தமிழ்மணத் தளத்திற்கு ஓட்டுப்பட்டையை தளத்தில் இணைத்துவிட்டு, அந்த ஓட்டுப்பட்டையின் வழியாகவே உங்களுடைய பதிவுகளை தமிழ்மண திரட்டியில் இணைத்துவிடலாம்.

tamilmanam oottu pattai
tamilmanam oottu pattai
பதிவுகளை இணைத்தவுடன் தமிழ்மண ஓட்டுப்பட்டைத் தோன்றும். அதில் உங்கள் தளங்களுக்கு வரும் வாசகர்கள், நண்பர்கள் போன்றவர்கள் உங்கள் பதிவு அவர்களை கவர்ந்தால் கைச்சின்னம் போல் உள்ள படத்தில் கட்டை விரல் உயரந்து இருக்கும் படத்தின் மீது கிளிக் செய்தால் போதும்.உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டுவிடும்.
கட்டை விரல் தாழ்ந்து இருக்கும் கையை கிளிக் செய்தால் மைனஸ் ஓட்டு பதிவாகும். இது உங்களுக்குப் பிடிக்காத பதிவுகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு ஆகும். மைனஸ் ஓட்டு போடுமளவுக்கு தற்போது யாரும் தரம்தாழ்ந்த பதிவுகளை எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஒவ்வொரு வாசகரும் ஓட்டுகளை அளிக்கும்போது, அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவுகள் தானியங்கியாக தமிழ்மணத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் பட்டியலிடப்படும்.

முகப்பு பக்கத்திற்கு வந்த பதிவுகளனைத்தையும் தமிழ்மண வாசகர்கள் படிக்க  வரும்போது உங்களுடைய தளத்திற்கான ஹிட்ஸ்ம் அதிகரிக்கும்.

இன்ட்லி:

இன்ட்லிதளத்தில் பதிவுகளை இணைக்கும் முறையைப் பார்ப்போம். இத்தளத்தில் தமிழ்மணம் தளத்திற்கு கூறியபடியே பயனர் கணக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு இன்ட்லி தளத்திற்கான ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். புதிய பதிவுகள் எழுதி வெளியிட்டப்பிறகு இன்ட்லியின் ஓட்டுப் பட்டையை கிளிக் செய்வதன் மூலம் இன்ட்லி தளத்திற்கு அழைத்துச்செல்லப்படுவீர்கள்.
அங்கு வழக்கம்போலவே பயனர் பெயர், கடவுச் சொல் கொடுத்தவுடன், தலைப்பு பட்டையின் மேலே இருக்கும் இணைக்க என்னும் தொடுப்பை சொடுக்கியவுடன் பதிவிற்கான URL கேட்கும்.
பதிவிற்கான இணைப்பு நிரலை URL காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்யவும். கீழிருக்கும் பிரிவுகள், Description போன்றவைகளை நிரப்பிவிட்டு, இறுதியாக இணைக்க என்னும் பட்டனைச் சொடுக்குவதன் மூலம் உங்கள் புதிய பதிவானது இன்ட்லி தளத்தில் இணைந்துவிடும்.

add post in indli websites
add post in indli websites

 தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் திரட்டி தளங்களனைத்தும் இன்ட்லி தளத்தைப் போன்றே செயல்படுகின்றன. எனவே அவ்வலைத்திரட்டிகளுக்கான விளக்கம் இப்பதிவில் இடம்பெறவில்லை.

தமிழ்வெளி:

தமிழ்வெளி தளத்திற்கான இணைப்பு படத்தை உங்கள் வலைத்தளத்தில் நிறுவியிருந்தாலே போதும். புதிய பதிவை வெளியிட்ட பிறகு உங்கள் தளத்திலிருள்ள தமிழ்வெளி தளத்திற்கான இணைப்பு படத்தை ஒரு முறைச் சொடுக்கினாலே தானியங்கியாக உங்கள் பதிவான தமிழ்வெளி தளத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
தமிழ் வெளித்தளத்திலும் உங்கள் பயனர் கணக்கை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். தமிழ்வெளி தளத்தில் பயனர் கணக்கை உருவாக்க இந்த இணைப்பில் செல்லவும்.

தமிழ்10

வளர்ந்துவரும் திரட்டிகளில் தமிழ்10ம் ஒன்று. தமிழ்10 வலைத்திரட்டி மற்ற திரட்டிகளிலிருந்து சற்றேவேறுபடுகின்றது. இத்தளத்தில் உங்களுக்கான பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் புதிய பதிவுகளை இத்தளத்தில் இணைக்க தளத்தில் உள் நுழைந்துகொள்ளுங்கள்.

உள் நுழைந்தவுடன் இவ்வாறு இணைக்க என்னும் இணைப்பு, தளத்தின் தலைப்பு பட்டையில் தோன்றும்.

அவ்வாறு தோன்றும் இணைக்க என்னும் இணைப்பில் கிளிக் செய்தால், முன்னரே தமிழ்10 தளத்தில் இணைக்கப்பட்ட பதிவுகள் ஏதேனும் 3 பதிவுகளுக்கு கட்டாயம் நீங்கள் வாக்களிக்க வேண்டும். இதுதான் தமிழ்10 தளத்திற்கு மற்ற தளங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

கட்டாயம் ஓட்டு கேட்பதால் அவசரத்திற்கு ஏதேனும் ஒரு இடுகையில் ஓட்டளித்து பதிவை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதே சமயம் புதிய பதிவுகளுக்கு குறிப்பிட்ட ஓட்டும் கிடைக்கிறது.

இவ்வாறு புதிய பதிவுகள் மூன்றனுக்கு ஓட்டளித்துவிட்டுதான் பதிவை இணைக்க முடியும்.
மூன்று பதிவுகளுக்கு ஓட்டளித்தப் பின்னர் தலைப்பு பட்டையில் உள்ள இணைக்க என்னும் சுட்டியை அழுத்தும்போது பதிவிற்குரிய URL கேட்கும் பெட்டித் தோன்றும். அதில் உங்கள் பதிவிற்குரிய URL கொடுத்து இணைக்க என்னும் பட்டனைச் சொடுக்கினால் அடுத்த பகுதிக்குச் செல்லும்.

அதில் வழக்கம்போலவே பதிவானது எந்த வகையைச் சார்ந்தது, பதிவிற்குரிய படத்தைத் தேர்ந்தெடுத்தல், பதிவிற்குரிய சிறிய விளக்கத்தை அளித்தல் ஆகியவைகளை முடித்துவிட்டு submit என்பதை அழுத்துங்கள்.

இப்போது இறுதியாக உறுதி செய்யும் பெட்டித் தோன்றும். அதில் திருத்து, சமர்ப்பி என்ற பட்டன்கள் இருக்கும். நீங்கள் ஏதேனும் தவறாகவோ, அல்லது கூடுதலாகவோ விபரங்கள் சேர்க்க விரும்பின் மீண்டும் திருத்து என்ற பட்டனை அழுத்தி அப்பக்கத்தில் வேண்டிய திருத்தங்கள் செய்துகொள்ளலாம்.

அல்லது சரியாக அனைத்தையும் செய்திருக்கிறேன் என நீங்கள் எண்ணினால் சமர்ப்பி என்ற பட்டனை அழுத்தி உங்கள் பதிவை தமிழ்10 தளத்தில் சமர்ப்பித்து விடலாம். இப்போது பதிவு தமிழ்10 தளத்தில் இணைந்திருக்கும்.  இணைந்த பதிவை பார்க்கவேண்டுமெனில் தமிழ்10 தளத்தில் காத்திருப்பு பட்டனை அழுத்தினால் உங்கள் பதிவானது காணக் கிடைக்கும்.

உங்கள் தளத்தில் தமிழ்10 தளத்திற்கான ஓட்டுப் பட்டையை வைத்திருப்பீர்களேயானால், தளத்திற்கு வரும் வாசகர்கள் அந்த ஓட்டுப்பட்டையை அழுத்தி உங்கள் பதிவிற்கு வாக்களிக்க முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற பதிவானது தமிழ்10 முகப்புப் பக்கத்தில் தோன்றும்.

இவ்வாறு தமிழ்10 தளத்தில் உங்கள் புதிய பதிவுகளை இணைத்துவிடலாம்.

ஒவ்வொரு வலைத்திரட்டியிலும் மேற்கண்ட முறைகளே பின்பற்றப்படுகின்றன. இம்முறைகளைப் பின்பற்றி உங்கள் புதிய பதிவுகளை வலைத்திரட்டிகளில் இணைத்து, அதிக வாசகர்களைப் பெற்று மகிழுங்கள்...!

நன்றி.!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz