Tuesday, 19 March 2013

ஃபேஸ்புக்கில் பதிவுகளை பகிர்வது எப்படி?

ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி? என்ற பதிவில் கூறியது போல, Social Networking Sites என்றழைக்கப்படும் சமூகத் தளங்களில் முதலிடத்தில் இருப்பது ஃபேஸ்புக் தளமாகும். அந்த தளத்தில் நம்முடைய பதிவுகளை தானியங்கி முறையில் பகிர்வது எப்படி? என்று பார்ப்போம்.


1. உங்கள் ஃபேஸ்புக் கணக்கைக் கொண்டு உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கணக்கு இல்லையெனில், புதிதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

2. பிறகு http://www.facebook.com/editnotes.php?import என்ற முகவரிக்கு செல்லுங்கள். அல்லது இந்த link-ஐயே க்ளிக் செய்யுங்கள்.

3. பிறகு வரும் பக்கத்தில் Web Url: என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கின் Feed URL-ஐ கொடுக்கவும். உதாரணத்திற்கு,

http://bloggernanban.blogspot.com/feeds/posts/default?alt=rss

**மேலுள்ள முகவரியில் bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை சேர்த்து கொடுக்கவும்.



4. அதற்கு கீழே உள்ள Option பட்டனை Select செய்து, Start Importing என்பதை க்ளிக் செய்யவும்.

5. பிறகு உங்கள் பதிவுகளை Preview காட்டும். அதனை சரி பார்த்து பின் Confirm என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.



6. பிறகு உங்கள் ஃபேஸ்புக் முகப்பு பக்கத்தை பார்க்கவும்.

அவ்வளவு தான்.. இனி நீங்கள் புதிய பதிவுகள் பதிவிடும் போதெல்லாம், தானாகவே உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் பகிரப்படும்.

Update 1:

தற்போது இதில் ஏதோ தவறு இருக்கிறது. அதை சரி செய்ய முயற்சிக்கிறேன்.


Upadate 2:

தற்போது வேலை செய்கிறது. ஆனால் தலைப்பு மட்டும் முழுவதுமாக வருவதில்லை.

Update 3: 

முன்பு பேஸ்புக்கில் சில வார்த்தைகளை மட்டும் தான் பகிர முடியும். ஆனால் தற்போது எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் பகிரும் வசதியை அளித்துள்ளது. அதனால்  உங்கள் ப்ளாக் Rss Feed-ஐ முழுவதுமாக வைத்திருந்தால், பதிவுகளும் முழுவதுமாக வந்துவிடும்.

இதனை சரி செய்ய Blogger Dashboard => settings => others பக்கத்திற்கு சென்று Allow Blog Feed என்பதில் Full என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்றை மாற்றவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz