GOOGLE
EARTH மென்பொருள் மூலம் நமது கணணி முன் அமர்ந்தவாறே உலகின் எந்த ஒரு
இடத்திற்கும் வினாடிகளில் பயணிக்கலாம். அதன் மூலம் ஒவ்வொரு நாடுகளின்
அமைப்பை நாம் கணணியில் இருந்தவாறே பார்த்து ரசிக்கலாம்.
முன் பின் தெரியாத ஊர்களுக்கு செல்லும் முன் இதன் மூலம் அங்கு பயணித்து
விட்டு அதன் பின்னர் செல்வோமானால் பயணம் எளிதாக அமையும். இதற்கு முதலில்
இங்கே கிளிக் செய்து GOOGLE EARTH மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இது இலவச மென்பொருள் தான். நிறுவியபின் மென்பொருளை திறக்கவும். அதன் பின்
ஒரு window திறக்கும். பெரிதாக பார்க்க விரும்புபவர்கள் படத்தின் மீது
click செய்யவும்.
1. நீங்கள் எந்த இடத்தை பார்க்க விரும்புகிறீர்களோ அதன் பெயரை தட்டச்சு
செய்து ENTER அழுத்துங்கள். இப்போது அந்த இடத்திற்கு நீங்கள் அழைத்து
செல்லப்படுவீர்கள். MOUSE ஐ முன்னும் பின்னும் SCROLL செய்து அருகிலோ
அல்லது தூரத்திலோ இருந்து பார்க்கலாம்.
2. நீங்கள் எதாவது இடத்திற்கு பெயர் சூட்ட விரும்பினால் இதை தேர்வு செய்து நீங்கள் விரும்பும் இடத்தில் சுட்டி பெயர் சூட்டலாம்.
3. இதை தேர்வு செய்து சுட்டுவதன் மூலம் இரு ஊர்களுக்கு இடையேயான தூரத்தை அளக்கலாம்.
4. GOOGLE EARTH ன் சிறப்பம்சமே இதில் தான் அடங்கியிருக்கிறது. இதை DRAG
செய்து ஒரு தெருவில் நிறுத்தினால் அந்த தெரு இயற்கையாக உள்ளபடியே
தோற்றமளிக்கும். அனைத்து இடங்களையும் இது போல பார்வையிட தற்போது வசதி இல்லை
என்றாலும் அனேக முக்கிய நகரங்களை பார்வையிட முடிகிறது.
Download As PDF
No comments:
Post a Comment