Tuesday, 19 March 2013

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 3

ஆறு  மாதங்களுக்கு பிறகு தொடரைத் தொடர்வதால் மறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனால் பதிவிற்குள் போகும் முன் இத்தொடரின் முந்திய பகுதிகளை பார்த்துவிட்டு வாருங்கள்.

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 1
நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 2  



Content is a King: 

நம்முடைய ப்ளாக்கை பிரபலமாக்கும் காரணிகளில் முக்கியமானதும், முதன்மையானதும் நம்முடைய பதிவுகளே! அவைகள் தான் வாசகர்களை நம்முடைய வலைப்பூவில் ஒன்ற வைப்பதும், திரும்பவும் வரவழைப்பதுமாகும். ஆங்கிலத்தில் "Content is a King" என்று சொல்வார்கள்.

பதிவெழுத சில டிப்ஸ்:

பொதுவாக பதிவெழுதுவதற்கு எந்தவிதமான வரைமுறைகளும் இல்லை. ஆனால், எது மாதிரியான பதிவுகளுக்கு வரவேற்பு அதிகம் என்று என்னுடைய கண்ணோட்டத்தில் இங்கு குறிப்பிடுகின்றேன்.

1. புதிய செய்திகள் (Breaking News)

2. நகைச்சுவை பதிவுகள் ( இதற்கு "மொக்கை" என்று இன்னொரு பெயரும் உண்டு)

3. தொழில்நுட்ப பதிவுகள் (இணையம், கணினி தொடர்பான பதிவுகள்)

4. டாப் டென் போன்ற பட்டியல்கள்

5. சினிமா செய்திகள் (திரை விமர்சனம்)

6. விவாதப் பதிவுகள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உங்கள் பதிவுகள் பிரத்யேகமானதாக (Unique Post) இருப்பது நலம்.முடிந்தவரை எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.இறைவன்  நாடினால், அடுத்த பகுதியில் நாம் பார்க்க இருப்பது,

"Killer Articles"

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz