Sunday, 10 March 2013

போட்டோசாப் டிப்ஸ் & டிரிக்ஸ் - 2 (பனிகாலம்) Fog Effect

 

     சில அழகிய படங்களில் தாங்கள் பார்க்கலாம், பனிகாலம் போன்று தோன்றும்...ஆனால் பெரும்பாலும் இவை உண்மையில்லை...சில போட்டோசாப் முறைகளை பயன்படுத்தி இதை ஏற்படுத்துகிறார்கள்.இதை எப்படி நாம் போட்டோசாபில் மேற்கொள்வது என்பதை தற்போது காணலாம்...

     இதற்கு தாங்கள் தங்கள் கணினியில் போட்டோசாப் மென்பொருளை இயக்கிக்கொள்ளுங்கள்...பிறகு தாங்கள் பனிகால Effectயை கொண்டுவர இருக்கும் புகைபடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்( File -> Open). பெரும்பாலும் இயற்கை காட்சிகள் நன்றாக பொருந்தும்....



     முதலில் தாங்கள் செய்ய வேண்டியது தங்கள் பேக் கிரைவுண்டு Background கலரை கருப்பு மற்றும் வெள்ளை (Black and White) நிறமாக அமைத்து க்கொள்ள வேண்டும். பின்னர் Gradient Toolயை தேர்வு செய்து கொள்ள வேண்டும்
உதவிக்கு மேலே இருக்கும் புகைபடத்தை காணவும்...





  • பின்னர்..Layer யில் Channel என்பதை கிளிக் செய்யவும்...அடுத்து Create a New Channel Buttonயை அழுத்தவும்...
  • தற்போது தங்களுக்கு புதிய சேனல் தோன்றியிருக்கும். இது கருமையாக காட்சியளிக்கும்.
  • தாங்கள் தற்போது Gradient Toolயை கொண்டு இதில் கிழேயிருந்து மேலாக Gradientயை ஏற்படுத்தவும்..இப்பணியை தாங்கள் Shiftகீயை அழுத்தியவாறே மேற்க்கொண்டால் இன்னும் சற்று சிறப்பாக அமையும்..
  • தாங்கள் தற்போது இந்த லேயரை(Alpha Layer) அப்படி இழுத்து கொண்டுவந்து....Load Channel as Selection என்பதில் விட்டு விடவும்...தற்போது தங்களுக்கு குறிபிட்ட இடம் மட்டும் தேர்வு (Select) செய்யப்பட்டிருக்கும்...
  • தாங்கள் தற்போது RCB என்பதில் கிளிக் செய்யவும்...அடுத்து தங்கள் கீபோர்டில் DELETE கீகை அழுத்தவும்....
உதவிக்கு மேலே உள்ள படத்தை காணவும்.




அய்யா! அய்யா! முடிந்தது அழகிய பனிகால புகைபடத்தை உருவாக்கிடிங்க.....பாலே பாலே கலக்குரிங்க....போங்க.....

அப்பறம் தங்கள் உதவிக்காக படங்கள் உள்ளன...புரியாதவர்கள் இதை பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள்....சரியா?
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz