பிளாக்கர் வலைப்பூவில் நாம் வருடக்கணக்காக எழுதிய பதிவுகளை
அனைத்தையும் ஒவ்வொன்றாக தேடி வாசகர்கள் படித்தறிவது என்பது இயலாத செயல்..
எனவே அவர்களுக்கு வசதியாக இந்த விட்ஜெட் கோடிங் பயன்படும். ஒரே பக்கத்தில்
பதிவுகளின் தலைப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டும்போது அவர்கள் தங்களுக்கு
விருப்பமான தலைப்புகளைக் கிளிக் செய்து பதிவுகளைப் படிக்க முடியும்.
இந்த
வசதியை ஏற்படுத்த கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்துகொள்ளுங்கள்.அல்லது
கீழிருக்கும் பெட்டியில் உள்ள நிரலை காப்பி செய்துகொள்ளுங்கள்.
இதில் www.thangampalani.com என்ற வலைப்பூவின் முகவரியை மட்டும் உங்கள் வலைப்பூவிற்குரிய URL கொண்டு மாற்றிவிடுங்கள். பிறகு மாற்றம் செய்த நிரல்வரிகளை வழக்கம்போலவே HTML/JAVASCRIPT கேட்கெட்டை தேர்வு செய்து அதில் பேஸ்ட் செய்து விடுங்கள். இப்போது நீங்கள் செய்த மாற்றத்தால் உங்கள் தளத்திலுள்ள அனைத்து பதிவுகளின் தலைப்புகளும் ஒரே விட்ஜெட்டில் காட்சியளிக்கும்.
இந்தப் பக்கத்திற்கான இணைப்புச் சுட்டியை காப்பி செய்து நேவிகேஷன் பாரில் வைத்துவிட்டால் போதும். தளத்திற்கு வரும் வாசகர்கள் அந்த இணைப்புச் சுட்டியைக் கிளிக் செய்து அனைத்துப்பதிவுகளையும் ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதியை கொடுக்க முடியும்.

- அதிகப் பதிவுகளை ஒரே விட்ஜெட்டில் காட்டுவதென்பது வலைப்பூவின் வடிவமைப்பை கொஞ்சம் நீளமாக காண்பிக்கும். இதைத்தவிர்க்க நீங்கள் Posting==>Edit Page==> New Page என்பதைக் கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- பிறகு அந்த பக்கத்திற்கு பொருத்தமான தலைப்பிட்டுக்கொள்ளுங்கள்(Title). நான் அனைத்துப் பதிவுகளையும் காண என தலைப்பிட்டுள்ளேன்.
- பிறகு Edit HTML என்பதை சொடுக்கிக்கொள்ளுங்கள்.
- பதிவு எழுதும் பெட்டியில் நீங்கள் மாற்றம் செய்த நிரல்வரிகளை பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
- பிறகு Posting Options கிளிக் செய்து compose settings -ல் Show HTML literally என்பதை தேர்ந்தெடுத்துவிட்டுக்கொள்ளுங்கள்.
- இறுதியாக Publish கொடுத்துவிடுங்கள்.
இந்தப் பக்கத்திற்கான இணைப்புச் சுட்டியை காப்பி செய்து நேவிகேஷன் பாரில் வைத்துவிட்டால் போதும். தளத்திற்கு வரும் வாசகர்கள் அந்த இணைப்புச் சுட்டியைக் கிளிக் செய்து அனைத்துப்பதிவுகளையும் ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதியை கொடுக்க முடியும்.
No comments:
Post a Comment