நாம் அன்றாடம் பயன்படுத்தும் தளங்களில் யூடியூபும் ஒன்று. எண்ணற்ற வீடியோக்களில் நந்தனவனமாக - விடியோ களஞ்சியமாக திகழும் யூடியூப் தளத்தில் தினந்தோறும் 25 கோடிக்கும் மேற்பட்ட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்படுகிறது.
எண்ணற்ற பார்வையாளர்களை,பயனர்களைப் பெற்ற யூடியில் நிறைய வசதிகள் கொட்டிக்கிடக்கிறது.
யூடியூபின் வரலாறு:
2005 ம் வருடம் தொடங்கப்பட்ட இத்தளத்தை கூகிள் 2006ம் ஆண்டு வாங்கிய பிறகு பல மாற்றங்களைக் கண்டுள்ளது. 10 மில்லியன் வீடியோக்களை உள்ளடக்கிய YouTube தளத்தில் இல்லாத வீடியோக்களே இல்லை எனலாம்.
அனைத்து வயதினருக்கும், அனைத்து துறையினருக்கும் பயன்படும் வீடியோக்கள் இத்தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. வேண்டிய வீடியோக்களை பார்ப்பதோடு, சில Third Party Program கள் மூலம் இத்தளத்தில் உள்ள வீடியோக்களை download செய்தும், வேண்டிய போது பயன்படுத்தலாம்.
யூடியூபில் வீடியோ அப்லோட் செய்வது எப்படி?
இது மிகச்சுலபமாதுதான். முதலில் நீங்கள் YouTube தளத்தில் பயனர் கணக்கைத் துவங்க வேண்டும். இதற்கு முன்னரே உங்களக்கு Gamil Account இருந்தால் அதன் மூலம் உள் நுழையலாம்.
உள்நுழைந்தவுடன் மேலிருக்கும் Upload என்பதைக் கிளிக் செய்யவும். Video Upload இரண்டு வழிமுறைகளில் செய்ய முடியும்.
வழிமுறை 1:
Drag and Drop முறையில் வீடியோவை இழுத்து Upload பகுதியில் விட்டாலே போதும். உங்களுடைய வீடியோ தரவேற்றம் தொடங்கிவிடும்.
வழிமுறை 2:
1. தோன்றும் விண்டோவில் Select File from Your computer என்பதைக் கிளிக் செய்யவும்.
2. பிறகு Browse என்பதை கிளிக் செய்து உங்களுடைய Video-வை தேர்ந்தெடுத்து Open கிளிக் செய்வதன் மூலம் தரவேற்றம் செய்ய முடியும்.
3. தவறான வீடியோவை Upload கொடுத்துவிட்டீர்களெனில் அதைத் தடுத்த நிறுத்த அந்தப் பக்கத்தில் உள்ள Cancel என்பதை அழுத்தி தரவேற்றுவதை நிறுத்திவிடலாம்.
4. தரவேற்றம் முடிந்த பிறகு, தரவேற்றிய வீடியவிற்கு நீங்கள் தலைப்பைக் கொடுக்கலாம்.
5. வீடியோவைப் பற்றி விளக்கத்தை Description என்பதில் கொடுக்கலாம்.
6. உங்கள் வீடியோவை தேடிப்பெறுவதற்குரிய குறிச்சொற்களை Tags என்பதில் கொடுக்கலாம்.
7. தரவேற்றிய வீடியோக்களுக்கு Category கொடுத்துக்கொள்ளலாம்.
8. Private Settings என்பதில் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான செட்டிங்ஸ்சை அமைத்துக்கொள்ளலாம்.
9. நீங்கள் மட்டும் காண விரும்பினால் Private என்பதையும், இணையத்தில் யார் வேண்டுமானால் காணலாம் என்பதை தெரிவிக்க Public என்பதையும் தேர்ந்தெடுக்கலாம்.
10. License and rights ownership என்பதில் இரண்டு வசதிகளில் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்க முடியும்.
வீடியோ தரவேற்றம் முடிந்த பிறகு, அந்த வீடியோவிற்கான URL தோன்றும். அதில் கிளிக் செய்தால் தரவேறிய வீடியோ காட்சிக்கு(Play) கிடைக்கும்.
தரவேற்றிய வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யலாம். உங்கள் வலைப்பூ அல்லது வலைத்தளத்தில் அவற்றை பதிவுடன் இணைத்து வெளியிடலாம்.
யூடீயூப் வீடியோக்களை வலைத்தளத்தில் தோன்றச் செய்வது எப்படி?
மிகச்சுலபமான வழிமுறைதான்.. உங்கள் YOUTUBE வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்யுங்கள்.
1. copy embed html என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. இப்போது வீடியோவிற்கான Embed coding நகலெடுக்கப்பட்டிருக்கும்.
3. உங்கள் பிளாகில் HTML மோடில் வைத்து காப்பி செய்த Embed coding -ஐ பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
4. தேவையெனில் அதில் உள்ள width, height என்பதில் வேண்டிய அளவினை மாற்றிக்கொள்ளலாம்.
5. இறுதியாக உங்கள் பதிவை Publish என்பதை சொடுக்கி வெளியிட்ட பிறகு உங்கள் வலைத்தளத்திலும் - வலைப்பூவில் வீடியோ காட்சியளிக்கும்.
No comments:
Post a Comment