Tuesday 19 March 2013

வாசகர்களை அதிகரிக்க Meta Tags


ப்லாக்கர் தளத்தில் Meta Tags-ஐ சேர்த்தால், கூகிள், யாஹூ, பிங் போன்ற தேடுபொறிகளின் மூலம் வரும் வாசகர்களை அதிகரிக்க செய்யலாம். அதனை நமது வலைப்பூவில் எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.

Meta Tags மூலம் உங்கள் தளத்தை பற்றிய தகவல்களை தேடுபொறிகளுக்கு நீங்கள் சொல்கிறீர்கள், அவ்வளவு தான்..

நாம் இப்பொழுது மூன்று விபரங்களை சேர்க்க போகிறோம்.

1. நமது தளத்திற்கான குறிச்சொற்கள் (Keywords)

2. நமது தளத்தை பற்றிய குறிப்பு (Description)

3. பதிவரின் (நமது) பெயர் (Author's Name)

வலைப்பூவில் Meta Tags-ஐ சேர்க்கும் முறை:

1. முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
2. பிறகு 


<b:include data='blog' name='all-head-content'/>
என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும். 


<meta content='DESCRIPTION' name='description'/>

<meta content='KEYWORDS' name='keywords'/>

<meta content='AUTHOR' name='author'/>
 மேலுள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றை பின்வருமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.

'DESCRIPTION' என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவை பற்றிய சிறிய தகவல். வெறும் குறிச்சொற்களை (Keywords) மட்டும் இதற்கு பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் தேடுபொறிகள் (Search Engines) உங்கள் தளத்தை தடை செய்துவிடும்.

 'KEYWORDS' என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு ஏற்ற குறிச்சொற்களை கொடுங்கள். குறிச்சொற்களை அதிகம் கொடுக்காதீர்கள். அதிகபட்சம் இருபது வார்த்தைகளாக இருக்கட்டும். அதே சமயம், ஒரே வார்த்தையை மூன்றுக்கு அதிகமாக உபயோகப்படுத்தாதீர்கள்

'AUTHOR' என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுங்கள்.

உதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு நான் கொடுத்துள்ள tags:



<meta content='வலைப்பதிவர்களுக்காக எளிய தமிழில் தொழில்நுட்ப உதவிக்குறிப்புகள்' name='description'/>

<meta content='ப்ளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்பம், கணிப்பொறி, வலைப்பூ, blogger tips in tamil, எப்படி, பதிவுகள், படங்கள், ப்லாக்கர்' name='keywords'/>

<meta content='நூ.ஹ. அப்துல் பாஸித்' name='author'/>

3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்துவிடுங்கள்.

அவ்வளவு தான்...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz