Tuesday 19 March 2013

ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி?


ப்ளாக்கர் தளங்களின் மேலே Default ஆக Navigation Bar இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது நமது டெம்ப்ளேட்டின் அழகுக்கு இடைஞ்சலாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
 

அதனை நீக்குவதற்கு இன்னொரு காரணம், அதில் Next Blog என்று இருப்பது. அதனை க்ளிக் செய்தால் சில நேரங்களில் தேவையில்லாத தளங்கள் (Spam blogs) அல்லது ஆபாச தளங்கள் (Adult Blogs) வரும். இதற்காகவும் நாம் அவசியம் நீக்க வேண்டும்.

 முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.


Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.
 

]]></b:skin>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none}

பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்... இனி உங்கள் தளத்தில் Navbar தெரியாது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz