Monday 11 March 2013

Blog வைத்திருப்பவர்கள் spam மெயில்களிலிருந்து தப்பிக்க.

http://usilampatti-chellappa.blogspot.com/2011/05/blogger-spam.html



You've been selected என வரும் லாட்டரி மெயில்களும் All in one improvement எனச் சொல்லி வரும் லேகிய மெயில்களும் எல்லாம் சுத்த ஸ்பேம்கள் ( Spam ).  இந்த குப்பை மெயில்கள் நம் மின்னஞ்சல் முகவரிகளை பிற தளங்களின் வழி தெரிந்து கொண்டு நமக்கு மெயில் அனுப்பி நம்மை
அவர்கள் வலையில் விழவைக்க முயற்சிப்பார்கள்.  இதனால்
தான் நம் மின்னஞ்சல் முகவரிகளை பொது இனைய பாரம்களில் அல்லது பிளாகரில் வெளியிடுவது நல்லதல்ல என்பார்கள்.  சிலர் புத்திசாலித்தனமாக தங்கள் மினஞ்சலை போடும் போது @ 'க்கு பதில் at என இட்டு அப்படியாவது ஸ்பேம் ரோபோக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள்.  அதாவது Name(at)gmail(dot)com என இடுவார்கள்.  ஆனால் நல்ல மாற்றாக என்னக்குப்படுவது நம் மின்னஞ்சல் முகவரியை ஒரு படமாக்கி அதை பிளாகில் இணைத்தால் ஸ்பேம் ரோபோக்களால் எளிதில் மின்னஞ்சல் முகவரியை படிக்க முடியாது.  எனவே ஸ்பேம் மெயில்களிடம் இருந்து  விலகி இருக்கலாம்.  கூடவே மெயில் முகவரியும் வண்ணமயமானதாக இருக்கும். ஈ-மெயில் ஐகான்களை உருவாக்க இங்கு செல்லுங்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz