Tuesday 19 March 2013

Recent Item History-களை தானாக நீக்குவது எப்படி?



நம் தனிப்பட்ட தகவல்களை அடுத்தவர்கள் பார்த்தால் நமக்கு எப்படி இருக்கும்? கணினியில் அப்படி யாரேனும்  உங்களுக்கே தெரியாமல் உங்களை கவனித்தால்? நீங்கள் கணினியில் என்ன செய்கிறீர்கள் என்பதை அடுத்தவர் அறியா வண்ணம் செய்வது மிகவும் முக்கியம்.
http://1.bp.blogspot.com/-8JFf1gz6Tjs/T3KtXICw67I/AAAAAAAADVk/MhAjR4-X7GQ/s200/Cancel_Delete_Icon.jpeg இதற்கு முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் Recent Items History என்பதை நீக்க வேண்டும். எப்படி?

அதாவது Start Menu வை கிளிக் செய்தால் வரும் Recent Documets-ல் யார் வேண்டுமானாலும் நம்முடைய செயல் பாடுகளை கவனிக்க முடியும் . இதற்காக ஒவ்வொரு முறையும் நம்மால் Recent Item  History  என்பதை நீக்கி கொண்டிருக்க முடியாது. ஆனால் நம்முடைய தனிமையும் முக்கியம் . என்ன செய்யலாம் ?

Start Menu மீது Right Click செய்து Properties என்பதை தெரிவு செய்யவும். அதில் Customize என்பதை தெரிவு செய்தால் கீழே படத்தில் உள்ளபடி வரும். பின்னர் Windows 7 பயன்படுத்தும் நண்பர்கள் Customize Start Menu என்பதில் உள்ள Recent Items என்பதை Unclick செய்து விடவும், XP பயன்படுத்தும் நண்பர்கள் கீழே இரண்டாம் படத்தில் உள்ளபடி செய்து விடவும்

http://1.bp.blogspot.com/-odEDdl7c14Q/T3HUxXgqwII/AAAAAAAAAfg/z6cf4YSqKxk/s320/1.bmp
For Windows 7

http://4.bp.blogspot.com/-bCRT1o6vDbk/T3KkE6tbUJI/AAAAAAAADVU/hc6DLyjwjjY/s320/Recent+in+XP.png
For XP


இதில் ஒரு பிரச்சினை என்ன என்றால் இது வெளியே காண்பிக்காவிட்டாலும் உங்கள் செயல்களை சேகரித்துக் கொண்டே இருக்கும்.அதாவது இது மறைத்து மட்டும் வைக்கிறது இதை வேறு வழிகளில் அறிய முடியும்

இந்த வம்பே வேண்டாம் தானாகவே எல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பவர்கள் இந்த மென்பொருளை  தரவிறக்கி நிறுவி கொண்டால் போதும்

http://3.bp.blogspot.com/-6qHXKph2iKU/T3HWmU1SBOI/AAAAAAAAAfo/ggY8hk6_vAM/s640/2.bmp


எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை  recent item  history  நீக்க வேண்டும் என்று கொடுக்க வேண்டும் .அவ்வளவு தான் அதன் பின்பு தானாகவே history நீக்க பட்டு விடும் .

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz