Thursday 3 October 2013

புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? (Tips and Tricks)

இதற்கு Windows இயங்கு தளத்திலே வசதியுள்ளது.

Windows
இல் இருக்கும் Command Prompt இனை பயன்படுத்தி எமது கணனியில் ஏராளமான விடயங்களை செய்யலாம். அந்தவகையில் புகைப்படத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஒரு புகைப்படத்தினுள் குறிப்பிட்ட செய்தி ஒன்றினை மறைப்பதற்கும் இதுவே உதவுகின்றது.


இதற்கு உங்கள் கணனியில் இருக்கும் Command Prompt திறந்து கொள்ளுங்கள்.
(Command Prompt திறக்க, WinKey+R அழுத்துவதன் மூலம் Run திறக்கலாம் Run இல் cmd என தட்டச்சு செய்து Enter அலுத்துக.)

WinKey+R அழுத்துவதன் மூலம் Run ஐ திறக்கலாம்

குறிப்பிட்ட புகைப்படத்தையும் மறைக்க வேண்டிய செய்தியையும் (Text) ஒரே கோப்பினுள் இட்டு வையுங்கள்.

இனி நீங்கள் மறைக்க வேண்டிய செய்தியையும் புகைப்படத்தையும் Command Prompt மூலம் திறக்க வேண்டும். உதாரணமாக குறிப்பிட்ட கோப்பு Drive D யில் இருப்பின் D: என Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அழுத்துங்கள். பின் cd என்பதுடன் கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்துங்கள் உதாரணமாக  Drive D இல் இருக்கும் கோப்பின் பெயர் image என இருப்பின் cd image என தட்டச்சு செய்யுங்கள்.

பிறகு copy /b என்பதுடன் புகைப்படத்தின் பெயரையும் நீங்கள் மறைக்க வேண்டிய செய்தி இருக்கும் Text Document இன் பெயரையும் செய்தி மறைக்கப்பட்ட புகைப்படம் வெளிவரவேண்டிய பெயரையும் தட்டச்சு செய்து Enter அலுத்துக. (கீழுள்ளவாறு)

copy /b imagefilename.jpg + textfilename.txt outputimagename.jpg

copy /b புகைப்படத்தின் பெயர்.jpg + செய்தியின் பெயர்.txt செய்தி மறைக்கப்படும் புகைப்படம்.jpg

Hide a massage into image using Command prompt

அவ்வளவு தான் இனி உங்கள் செய்தி குறிப்பிட்ட புகைப்படத்தினுள் மறக்கப்பட்டு விட்டது. மறைக்கப்பட்ட செய்தியை பார்க்க வேண்டுமெனின் குறிப்பிட்ட கோப்பினுள் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படத்தை Notpad ஒன்றினை திறந்து அதனுள் Drag and Drop செய்து பாருங்கள் Notpad இன் கடைசி வரியில் மறைக்கப்பட்ட செய்தியை காணலாம்.


வருகைக்கு நன்றி!!!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz