Thursday 3 October 2013

அருமையான ஒரு Photo Editor மென்பொருள்.

இலவச Photo editor Photoscape
நம் அணைவருக்கும் Photoshop பற்றி நன்கு தெரியும். எமது புகைப்படங்களை எமக்குத்தேவையான விதத்தில் மாற்றியமைக்க உதவுகின்றதுஎனினும் இதற்கு பெரும்தொகை பணத்தை செலுத்தி பெறவேண்டியுள்ளது. அத்துடன் இதனை அணைவராலும் பயன்படுத்த முடிவதில்லை.
அத்துடன் அண்மைய பதிப்புக்களை எமது கணனியில் நிறுவ உயர்தரத்திலான வன்பொருள் ஆதரவினை கேட்கின்றது.

photoscape download


சரி விடயத்துக்கு வருவோம் Photoshop இன் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அதற்கு சற்று நிகரான ஒரு மென்பொருள் இருக்கின்றது. இது Photoscape என அழைக்கப்படுகின்றது. இது மேற்சொன்ன Photoshop இன் குறைகளை நிவர்த்தி செய்வதோடு சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் அண்மைய பதிப்பு வெறும் 20Mb யினை மட்டும் கொண்டுள்ளதால் இதனை தரவிறக்குவதும் இலகு என்பதுடன்  மிக  உயர்தரத்திலான வன்பொருள் ஆதரவினை எதிர்பர்பதில்லை.

http://1.bp.blogspot.com/-sWAGZhJZOTs/UL6v-9zVUAI/AAAAAAAAAHk/1OoLJHUXRFc/s320/ta-topsoftdown.jpg

Photoscape இன் சிறப்பம்சங்கள்.
  • இதன் மூலம் உங்களுடைய அனைத்து புகைப்படங்களையும் பார்க்க முடிவதுடன் உங்களது புகைப்படங்களுக்கான Slide Show இணை உருவாக்க முடியும்.
  • உங்களது புகைப்படங்களின் அளவுகளை மாற்ற முடிவதுடன் brightness and color adjustment, white balance, backlight correction, frames, balloons, mosaic mode, adding text, drawing pictures, cropping, filters, red eye removal, blooming, paint brush, clone stamp, effect brush போன்ற செயற்பாடுகளை இலகுவாக மேட்கொள்ளலாம்.
  •  பல புகைப்படங்களை ஒன்றாக இணைக்கலாம்.
  • பல புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கலாம்.
  • தேவைக்கேற்ற விதத்தில் Print Out இணை பெறலாம்.
  • ஒரு புகைப்படத்தினை பல்வேறு துண்டாக வெட்டலாம்.
  • மேலும் பல பல புதிய அம்சங்களை இது தன்னகத்தில் கொண்டுள்ளது
இதனை ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள் மாற்றத்தினை உணர்வீர்கள்.


இதனை தரவிறக்க : Photoscape

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz