Wednesday 2 October 2013

Shortcut icon களில் இருக்கும் அம்புக்குறி அடையாளத்தை நீக்க வேண்டுமா? அல்லது அதற்கு பதிலாக வேறு ஒரு அடையாலத்தை இட வேண்டுமா?

பொதுவாக Windows கணனிகளில் Shortcut Icon களை அறிந்து கொள்வதற்காக அம்புக்குறி அடையாளமும் அதனுடன் இணைந்தே இருக்கும். என்றாலும் கணனியில் வித்தைகள் பல செய்ய எண்ணுபவர்களுக்கு இதனை நீக்கவும் தோன்றும்.


இதோ அதற்கு வழி இருக்கின்றது. இதற்கு உதவுகிறது Windows Shorcut Arrow Editor எனும் Application வெறும் 808 KB அளவையே கொண்ட இந்த Zip கோப்பினை தரவிறக்கி Extract செய்வதனூடாக நேரடியாக பயன்படுத்த முடியும் கணனியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை.


இது Windows 7, Windows Vista, மற்றும் Windows 8  கணனிகளில் சிறப்பாக இயங்குகிறது. Extract செய்யப்பட கோப்பில் இருக்கும் உங்கள் கணனிக்கு பொருத்தமான Application Double Click செய்வதன் மூலமாக பின்வரும் நான்கு Options களை பெற முடியும்


Windows Shorcut Arrow Editor


Windows Default, Classic Arrow, No Arrow மற்றும் Custom என்பனவாகும். இவற்றில் No Arrow என்பதனை தெரிவு செய்வதன் மூலம் Shortcut Icon களிலிருந்து அம்புக்குறி அடையாளங்களை நீக்கவும் Custom எனும் தெரிவின் மூலம் அம்புக்குறிக்கு பதிலாக வேறு ஒரு அடையாளத்தை பயன்படுத்தவும் முடியும்.



இதனை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம். பயன்படுத்திதான் பாருங்களேன்.



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz