பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அதில் அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.
50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும் இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7
வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.95 வினாடிகளையும் தலைமுடியை பார்க்க 0.85 வினாடிகள் செலவிட்டதாகவும் கருத்து கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment