Saturday 4 May 2013

கணினிகளுக்கு WiFi மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்த

working method of WiFi network
WiFi மோடம் செயல்படும் விதம்.
ஒரே ஒரு இணைய இணைப்பைக் கொண்டு வீட்டிலிருக்கும் மற்ற கணினிகளுக்கும் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம். 

பெரிய பெரிய கம்பெனிகளுக்கு குழு இணைப்புக் கட்டணம் சாத்தியமாகும். ஆனால் வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு அவ்வாறு குழு இணைப்பைப் பெற்று பயன்படுத்த முடியாது. காரணம் அதிக செலவாகும். இணைய பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகும். 
உங்கள் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை வெவ்வேறானவர்கள் பயன்படுத்தும்போது, ஒரே சமயத்தில் இரு கணிகளுக்கும் இணைய இணைப்பு வேண்டுமெனில் என்ன செய்வது?

இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளில் இணைய இணைப்பு ஏற்படுத்தி பயன்படுத்த வேண்டுமெனில் Local Area Network என்றழைக்கப்படும் LAN setting செய்து, பிறகு ஒரு கணினியை Modem வழியாக Landline connetion-ல் இணைத்து இணைய இணைப்பைப் பெற்று பயன்படுத்தலாம். இந்த LAN மூலம் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இது ஒரு முறை. 

இவ்வாறு இல்லாமல் Land line connection உடன் தற்போது மலிவான விலையில் தரமான WiFi Modem கிடைக்கிறது. இந்த மோடத்தை வாங்கி வந்து வீட்டிலுள்ள ஏதாவது கணினியுடன் இணைத்து அதற்கு தரைவழி இணைப்பையும் கொடுத்துவிடுங்கள். பிறகு இதை செயல்படு நிலையில் வையுங்கள். பிறகு wifiல் உள்ள முதல் பட்டனை அழுத்தினால் அதில் உள்ள signal light எரியும். 

பிறகு இணைய இணைப்பு இல்லாத கணினியில் உங்கள் WiFi Modem த்திற்கான Software-ஐ நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு Screen Taskbar-ல் wifi-க்கான லோகோ தெரியும். அதில் கிளிக் செய்தால் இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும். அதில்wireless network connection Digisol என்பதற்கு அருகில் இருக்கும் கனெக்ட் பட்டனை அழுத்தவும். 

அழுத்தவுடன் connect to the network என்ற dialogue பெட்டி தோன்றும். அதில் கனெக்ட் டூ டிஜிசோல் (Connecting to Digisol) என்ற செய்தியுடன் உங்கள் கணினிக்கான இணைய இணைப்பு கிடைத்துவிடும். இப்போது எளிதாக நீங்கள் இணைய இணைப்பின் வழியாக பணியாற்ற முடியும். 

connect two computers with wifi modem
connect two computers with wifi modem

இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி இணைய இணைப்பு வாங்கத் தேவையில்லை. இணைய இணைப்பிற்கான கூடுதல் கட்டணம் (Additional fee) செலுத்துவதும் தவிர்க்கப்படுகிறது. ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளை இவ்வாறு இணைத்து WiFi modem மூலம் வீட்டிலும் இணையத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz