வேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற: வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை
உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம்.
வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம்.
1. அரபிக் எண்கள் – 1,2,3 ..
2. அரபிக் எண்கள் சிறிய டேஷ் அடையாளத்துடன் –1, –2,–3 ..
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III...
4. லோயர் கேஸ் ரோமன் i, ii, iii
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C, ...
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c, ...
இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும்.
3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்டில் டேட்டா சார்ட்டிங்: ஒரு சிலர், வேர்டில் அமைந்துள்ள தகவல்களை வகைப்படுத்த, அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று, பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டும் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர். இது தேவையே இல்லை. வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைக் கொண்டுள்ளது.
வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப்படுத்தலாம்.
டெக்ஸ்ட்டை கீழாக அல்லது மேலாக அமைக்க: டாகுமெண்ட் ஒன்றில் நீங்கள் முக்கியத்துவம் காட்ட விரும்பும் சொற்களை மற்ற சொற்களிலிருந்து சற்று தூக்கியோ அல்லது இறக்கியோ காட்டுவது ஒரு ஸ்டைலாகும். இதனை வேர்ட் தொகுப்பில் எளிதாக அமைக்கலாம்.
1. எந்த சொற்களை இவ்வாறு அமைக்க வேண்டுமோ அவற்றை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. பின் இதில் ரைட் கிளிக் செய்து “Font” தேர்ந்தெடுக்கவும்.
3. “Font” என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் “Text Effects” என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து “Position” என்ற இடத்திற்கு அருகே உள்ள பல ஆப்ஷன்ஸ் உள்ள பெட்டியில் “Normal”, “Raised” அல்லது “Lowered”. என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் எப்படி அமைய வேண்டும் என விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

No comments:
Post a Comment