டாக்குமெண்ட்களை
சுருக்க பயன்படும் பார்மெட்தான் ஜிப் பைல் பார்மெட் ஆகும். இதன் மூலம்
அதிகமாக உள்ள பைலின் அளவை குறைக்க முடியும். நம்மிடம் ஒரு பத்து
புகைப்படங்கள் உள்ளன, அவை அனைத்தையும் ஒரே பைலாக ஈமெயில் செய்ய வேண்டும்
என்ன செய்வோம் உடனே அவை அனைத்தையும் பிடிஎப்,வேர்ட் அல்லது வேறொரு பைலாக
மாற்றம் செய்து அனுப்ப முயற்ச்சிப்போம், ஆனால் குறிப்பிட்ட படங்கள் அனைத்து
அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே பைலாக அனுப்ப வேண்டுமெனில்
நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில்
ZIP/RAR பைல்களை கணினி பயனாளர்கள் பயன்படுத்துவதே பைல் அளவை
குறைப்பதற்க்குதான். சரி நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டிட்டு ஏதோ
சொல்கிறேன். சரி நான் நேரிடையாக விஷயத்திற்கு வந்து விடுகிறேன். வேர்ட்,
பிடிஎப் பைல் பார்மெட்களுக்கு எல்லாம் கடவுச்சொல் இட்டு பூட்டமுடிகிறது.
அதே போல் ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு எவ்வாறு பூட்டுவது என்று ஒரு
சந்தேகம் அதற்கான பதில் கீழே.
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-
முதலில் எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப்
பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து, ஒரே போல்டரில்
அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில்
winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை தேர்வு செய்து ஜிப் பைலை
உருவாக்கி கொள்ளவும்.
இப்போது ஜிப் பைலானது
உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில்
Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். அடுத்தாக zip என்னும்
ஐகானை தேர்வு செய்யவும், தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிப் பைலை தேர்வு
செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும்.
Zip பொத்தானை அழுத்தியவுடன்,
கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும், அதில் குறிப்பிட்ட Zip
பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில்
கடவுச்சொல் உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு
செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு
ஜிப் பைல் இருக்கும் கடவுச்சொல் இணைக்கப்பட்டு. நீங்கள் புதியதாக
உருவாக்கிய பெயரில் இருக்கும். இதனுடைய முழுஅர்த்தம் என்னவெனில் நீங்கள்
உருவாக்கிய ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் உருவாக்க, மீண்டும் அதே ஜிப் பைலை
மற்றொரு ஜிப் பைலக உருவாக்குகிறோம்.
ரேர் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-
முதலில் கூறியவாறே ஒரு போல்டரில்
டாக்குமெண்ட்களை உள்ளிட்டு கொள்ளவும். பின் வலது கிளிக் செய்து தோன்றும்
வரிசையில் Add to Archive என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில், Advance என்னும் டேப்பை தேர்வு செய்து Set password என்னும் பொத்தானை அழுத்தவும்.
SetPassword பொத்தானை அழுத்தியவுடன்
தோன்றும் விண்டோவில் உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை
அழுத்தவும். இப்போது கடவுச்சொல் உள்ளிடப்பட்டு Rar பைலானது
உருவாகியிருக்கும்.
No comments:
Post a Comment