http://anbhudanchellam.blogspot.in/2011/06/wi-fi-technology.html
கம்பிவடத் தொழில் நுட்ப முறைக்கு மாற்றாக கம்பியில்லாத வயர்லெஸ் தொழில்நுட்பம் இன்று பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒருவகையே ஒய்-ஃபி (Wi-Fi). இது ஒயர்லெஸ் ஃபிடெலிடி (Wireless Fidelity) என்பதன் சுருக்கமாகும். இத்தொழில் நுட்பம் ஒய்-ஃபி அல்லயன்ஸால் (Wi-Fi Allaines) உருவாக்கப்பட்டது.
வயர்லெஸ் நுட்பம் வானொலி, தொலைக்காட்சி, கணினி, கைபேசி மற்றும் பல சாதனங்களில் வெவ்வேறுஅலைவரிசைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஒய்-ஃபி-க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) முதல் 5 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) வரையிலான அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுவர். வினாடிக்கு 11 மெகா பைட் (Mega Byte) முதல் 140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டது. இத்திறனை அடிப்படையாக வைத்து 802.11ஒ, 802.11, 802.11ப, 802.11 என நான்கு உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
அலுவலகங்களில் வயர்கள் இல்லாமல் வயர்லெஸ் முறையில் கணினிகள், பிரிண்டர்கள், மடிக்கணினிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்திட (LAN) இத்தொழில்நுட்பம் உதவுகிறது.
தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் ஆகிய பல இடங்களில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கென ஒய்-ஃபி அக்ஸஸ் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வீடுகள் சிறு நிறுவனங்களில் இணைய இணைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மோடம்களில் ஒய்-ஃபி ரூட்டர்கள் (Wi-fi Router) பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன.
இதுபோன்ற ஒய்-ஃபி வசதி உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மடிக்கணினிகள் (Laptop), குளிகைக் கணினிகள் (Tablot Pc) மற்றும் கைபேசிகள் (Smart Phones) சந்தையில் பல மாடல்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
ஒய்-ஃபி சாதனங்களுக்கான இந்திய சந்தையின் தற்போதைய மதிப்பு சுமார் 120 கோடி. வரும் ஆண்டுகளில் இது 400 கோடியாக வளர்ச்சியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழில் நுட்பம் சிறந்ததாக இருந்தாலும் இதிலும் சில பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளது. ஒய்-ஃபி நெட்வொர்க்கில் ஹேக்கர்கள் எளிதில் நுழைந்து நம் தகவல்களைத் திருடி நாசவேலையில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் உண்டு.
ஒய்-ஃபி நெட்வொர்க்கில் தகவல் திருட்டு
ஒய்-ஃபி நெட்வொர்க்கின் எல்லைக்குட்பட்ட சுற்றுப்புறத்தில் எங்கிருந்தும் அந்த நெட்வொர்க்கை ஹேக் செய்யமுடியும். இதற்கான மென்பொருள்கள்கூட இணையத்தில் கிடைக்கின்றன.
இதுபோன்ற திட்டமிட்ட ஹேக்கிங் மட்டுமல்லாமல் ஏதோச்சையாக கிடைக்கும் ஒய்-ஃபி நெட்வொர்க்கில் நுழைந்து விளையாட்டாக அல்லது விஷமத்தனமாகக் குழப்பங்களை ஏற்படுத்துதல், தகவல்களைத் திருடுதல் ஆகியவையும்கூட நிகழ்கின்றன.
தற்காலிகமாக போலியான ஒய்-ஃபி நெட்வொர்க்கை உருவாக்கி தொடர்பு கொள்ளும் கணினிகளில் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்
இதுபோன்ற தீய நோக்கத்துடன் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை அணுகாமல் தடுக்க ஒய்-ஃபி ரூட்டரின் பாஸ்வேர்டை சாதாரணமானதாக இல்லாமல் கடினமானதாக அமைக்கவேண்டும்
உங்கள் ஒய்-ஃபி நெட்வொர்க்கிற்கான பாதுகாப்பு அமைப்பை (Security Setup) எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கவும். வீடுகள் மற்றும் சிறு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒய்-ஃபி ரூட்டர்களுக்கும் இவை பொருந்தும். பயன்படுத்தாத போது மின் இணைப்பைத் துண்டித்து விடுவதே நல்லது. உங்கள் நெட்வொர்க்கில் உள்ள ஒய்-ஃபி கருவிகளுக்கு மட்டுமே இணைப்பை அனுமதிக்கும் படியான ஃபில்டர்களைப் பயன்படுத்தவும். ஒய்-ஃபி சாதனங்களில் வேறு திறந்த நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் (Automatic Access) தானியங்கி அமைப்புகள் இருந்தால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும். நிறுவன நெட்வொர்க்குகளுக்கு ஃபயர்வால் (Firewall) போன்ற கூடுதலான பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தவேண்டும்.

No comments:
Post a Comment