Friday 11 October 2013

தமிழ்நாடு அரசு வழங்கிய லெனோவோ லேப்டாப்பை பார்மட் செய்வது பற்றிய தகவல்

  இணைய நண்பர்களுக்கு எனது வணக்கம்.இப்போது தமிழ்நாடு அரசு சார்பில் இலவசமாக லெனோவோ லேப்டாப் மாணவ,மாணவியர்களுக்கு வழங்கி வருகிறது.இப்போது பிரச்சனை என்னவென்றால் மாணவ,மாணவியருக்கு வழங்கிய லேப்டாப் வழங்கும்போதே சரியாக இன்ஸ்டால் செய்ய படாமலும்,மேலும் வழங்கிய லேப்டாப்களில் முழுவதும் வைரசாகவும் உள்ளதால் மாணவ,மாணவியர்கள் லேப்டாப்பை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அதிக பணம் கொடுத்து பார்மட் செய்து வருகின்றனர்.
              சென்ற மாதம் எனது பக்கத்து வீட்டு பையன் அவனுக்கு கொடுத்த லேப்டாப்பை பார்மட் செய்து கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தான். நானும் வழக்கம் போல EXTERNAL DVD WRITER மூலமாக பார்மட் அடித்தேன். ஆனால் ஒரு சில நிமிடங்களில் எரர் செய்தி வந்து பார்மட் ஆவது நின்று விட்டது.நானும் சில முறை முயற்சி செய்து பார்த்து விட்டு எனது நண்பரிடம் எப்ப்ரச்சனை பற்றி கேட்டேன்.
             அதற்கு எனது நண்பர் இந்த மாதிரி லேப்டாப்புகளை ISO பைலை பயன்படுத்தி பார்மட் செய்யலாம் என்று கூறினார்.அது எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு விளக்குகிறேன்.
             முதலில் நீங்கள் எந்த OS விரும்புகிறீர்களோ அந்த OS க்கான ISO இமேஜ் பைலை பூட்டபுளாக மாற்ற உதவும் மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.எனக்கு கம்படாபுளாக இருப்பது WINDOWS 7 மற்றும் WINDOWS XP . எனவே நான் WINDOWS 7 USB DVD  டூலை டவுன்லோட் செய்து கொண்டேன்.
              இந்த WINDOWS 7 USB DVD TOOL டவுன்லோட் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
             இனி விண்டோஸ் 7 ISO இமேஜ் பைலை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.(குறிப்பு:இமேஜ் பைல் கிட்டத்தட்ட இரண்டரை gp அளவு இருக்கும் எனவே இதற்கு 4 GP அளவுள்ள பெண் டிரைவ் தேவை மற்றும் இந்த பைலை டவுன்லோட் செய்வதற்கு இன்டர்நெட் ஸ்பீடாக இருக்க வேண்டும்.)
             WINDOWS 7 PROFESSIONAL x86 SP1 ISO இமேஜ் பைலை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
           முதலில் WINDOWS 7 USB DVD  டவுன்லோட் டூலை இன்ஸ்டால் செய்யவும்.அடுத்து 4GP பென் டிரைவை சிஸ்டத்தில் சொருகி அதனை பார்மட் செய்து வைத்து கொள்ளவும்.
            பின்பு WINDOWS 7 USB DVD டவுன்லோட் டூல் சொப்த்வேரை ஓபன் செய்து BROWSE என்ற பட்டனை அழுத்தி WINDOWS 7 ISO பைலை தேர்ந்தெடுத்து NEXT என்ற பட்டனை அழுத்தவும்.

           பின்பு USB DEVICE என்ற பட்டனை அழுத்தி அடுத்து வரும் பாக்சில் BEGIN COPYING என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


          இப்பொழுது ISO பைல் பென் டிரைவில் பூடபுளாக ஏறி விடும். இனி நீங்கள் உங்கள் லெனோவோ லேப்டாப்பை பென் டிரைவ் மூலமாக பார்மட் செய்யலாம்.

          மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கிழே உள்ள விடியோவை PLAY செய்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளவும்.
http://www.youtube.com/watch?v=DyS6l-bvHfo&feature=player_embedded


http://www.youtube.com/watch?v=nCubi4P2E8c&feature=player_embedded


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz