Saturday, 16 March 2013

தேடியந்திரங்களுக்காக பிளாக்கரில் சில புதிய வசதிகள் [SEO Tricks]

http://anbhudanchellam.blogspot.in/2012/03/seo-tricks.html
கூகுளின் இலவச தளங்களான பிளாக்கர் இலவச வலைப்பூக்களை பெரும்பாலனவர்கள் உபயோகித்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக பல தளங்கள் இலவச வலைப்பூக்களை வழங்குவதால் இவற்றிக்கு இடையில் மிகுந்த போட்டி காணப்படுகிறது. பிளாக்கர் நிறுவனமும் அவர்களின் வலைப்பூக்களுக்கு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி வாசகர்களை கவர்கின்றனர். இந்த வரிசையில் இன்று சில புதிய வசதிகளை அறிமுகபடுத்தி உள்ளனர். இந்த புதிய வசதிகள் தேடியந்திரங்களில் வலைப்பூக்கள் தெரிவதை மயப்படுத்தி உருவாக்கி உள்ளனர்.

முதலில் இந்த வசதிகள் பிளாக்கரின் புதிய தோற்றத்தில் தான் முதலில் அறிமுகபடுத்தி உள்ளனர். எனவே உங்கள் டாஸ்போர்டில் Try the updated Blogger Interface என்ற லிங்க்கை அழுத்தி புதிய தோற்றத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.

முதலில் புதிய தோற்றத்தின் டாஸ்போர்ட் பகுதியில் Settings பகுதிக்கு செல்லுங்கள். அதில் Search Preferences என்ற புதிய வசதி காணப்படும் அதை க்ளிக் செய்யவும்.
blogger search preferences
உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் Mata tags, Errors and redirection, Crawlers and Indexing என்ற மூன்று பிரிவுகள் காணப்படும். இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. Meta Tags:

உங்கள் வலைப்பூக்கள் தேடியந்திரங்களில் உங்கள் பிளாக்கை தேடுபவர்களுக்கு உங்கள் பிளாக் முகவரியுடன் உங்கள் பிளாக்கை பற்றிய சிறிய முன்னோட்டமும்(Description) கொடுத்தால் உங்கள் பிளாக்கில் என்ன உள்ளது என்பதை அறிய வாசகர்களுக்கு சுலபமாக இருக்கும். Meta tags பகுதியில் உள்ள Edit பட்டனை க்ளிக் செய்யவும்.
Enable Description? என்பதில் Yes என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு சிறிய கட்டம் திறக்கும் அதில் உங்கள் வலைப்பூவின் Description கொடுத்து கீழே உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
இனி உங்கள் வலைப்பூ தேடியந்திரங்களில் தெரியும் பொழுது அதனோடு சேர்ந்து இந்த Description தெரியும்.

2. Errors and redirections

Custom not Found
ஒரு சில சமயங்களில் நம் வலைப்பூவில் தவறான அல்லது அழிக்கப்பட்ட பதிவின் லிங்கை கிளிக் செய்தால் Page not found என்ற செய்தி வருவதை பார்த்து இருக்கலாம். இனி அந்த செய்திக்கு பதில் நீங்கள் விரும்பி செய்தியை அந்த பக்கங்களில் காட்டும்படி அமைக்கலாம்.

முதலில் அங்கு உள்ள Custom page not found என்ற பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை அழுத்தி வரும் கட்டத்தில் உங்களுடைய செய்தியை டைப் செய்து விட்டு கீழே உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தி சேமித்து கொள்ளவும்.
blogger search preferences
Custom Redirects:
உங்கள் பிளாக்கரில் தவறுதலாக பதிவை delete செய்து இருப்பீர்கள். ஆனால் அதற்க்கும்னு Backup எடுத்து வைத்து இருப்பீர்கள் அதை திரும்பவும் அப்லோட் செய்து பப்ளிஷ் செய்தால் URL மாறிவிடும் ஆனால் தேடியந்திரத்தில் பழைய URL தான் காண்பிக்கப்படுகிறது என வைத்து கொள்வோம் அது போன்ற சமயத்தில் பழைய முகவரிக்கு வரும் வாசகர்களை இந்த புதிய பக்கத்திற்கு வரும்படி Redirect செய்து கொள்ள உதவுவது தான் இந்த வசதி. 
இந்த பகுதியில் From பகுதியில் பழைய முகவரியையும் To பகுதியில் புதிய முகவரியையும் கொடுத்து சேமித்து விடவும் இனி பழைய பக்கத்திற்கு வரும் வாசகர்களுக்கு புதிய பக்கம் தானாகவே Redirect ஆகிவிடும்.

3. Crawelers and Indexing 

கூகுள் தேடியந்திரம் இணையம் முழுவதும் கோடிக்கணக்கான இணைய தளங்களின் பக்கங்களை index செய்வதற்கு robot என்ற தானியங்கி முறையில் பதிவுகளை index செய்கிறார்கள். இதில் உங்கள் வலைபக்கத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் கூகுளில் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.

இதில் ஒரு சில பக்கங்கள் கூகுளில் தெரிய வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் (உதாரணமாக Contact Me பக்கம்) அந்த URL இந்த கட்டத்தில் கொடுத்து விட்டால் போதும் இனி அந்த பக்கம் கூகுளில் கண்டறியப்படாது.

இன்னும் சில பயனுள்ள வசதிகளை பிளாக்கரில் அறிமுகப்டுதியுள்ளனர். அவைகளை பற்றி விரிவாக நாளைய பதிவில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz