Publish your post Automatically in Future |
ஆரம்பத்தில் நம் பிளாக்கில் எழுதும் போது அதிக நேரம் நமக்கு இருக்கும். ஆனால் நாளடைவில் நமக்கும் பல நேரங்கள் இருப்பதால். தொடர்ந்து பதிவுகளை பதிவிடுவதில் போதுய நேரம் இருக்காது. தாங்களால் வாரத்திற்கு ஒரு முறை தான் பதிவை இடும்போது தங்களின் வாசகர்களின் வருகையும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு அருமையான் தீர்வு ஓன்று உள்ளது. இந்த சேவையை பிளாக்கரே வழங்குகிறது என்பதை பலரும் அறியவில்லை அதை பற்றி தான் நான் கூறயிருக்கிறேன்.
இந்த சேவையை தாங்கள் மேற்க்கொண்டால். பல நாட்களுக்கு முன்னரே அதாவது இன்று தாங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்றால் அடுத்த வாரத்திற்கான பதிவை இப்போதே தாங்கள் மேற்கொள்ள முடியும். தாங்கள் பதிவு எதிர்காலத்தில் எந்த தேதி, நேரத்தில் பதிவிடபட வேண்டும் என தாங்கள் குறிபிட்டுவிட்டால் போது அந்த குறுபிட்ட தேதியில் தங்கள் பதிவு தானாக தங்களின் வலைபகுதியில் பிரசுரம் ஆகிவிடும். இதை மேற்கொள்வதற்கு
- முதலில் தங்கல் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- பின்னர் தங்களின் பதிவை டைப் செய்யுங்கள். பொதுவாக தாங்கள் மேற்கொள்ளும் முறைகளே.
- தங்கள் பதிவை டைப் செய்யும் விண்டோ கீழே அதாவது LABLES என்னும் எழுத்திற்கு கீழே POST OPTIONS என்று இருப்பதை கவனியுங்கள் இதை கிளிக் செய்யுங்கள்.
- இதில் POST DATE AND TIME என்று இருக்கிறதா. இதில் AUTOMATIC என்று தேர்வு செய்யப்பட்டுயிருக்கும். இதற்கு பதில் தாங்கள்....
- அதற்கு கீழே Scheduled at இருக்கும் என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் தங்களின் இந்த பதிவு எந்த தேதியில் என்ன நேரத்திற்கு பதியப்பட வேண்டும் என குறிபிடுங்கள். பின்னர் கடைசியாக..
- PUBLISH POST என்பதை கிளிக் செய்துவிடுங்கள். அவ்வளவு தான் இனி தாங்கள் குறிபிட்ட தேதியில் தங்களின் பதிவு தானாக பதியப்படும்.
அவ்வளவு தான் முடிந்தது.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இந்த தகவல் பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி! |
No comments:
Post a Comment