நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை எடிட் செய்ய வேண்டுமானால் வீடியோ எடிட்டிங் மென்பொருளை கண்டிப்பாக நிறுவியிருக்க வேண்டும்.
ஒரு
சில வீடியோக்களை தான் எடிட் செய்ய வேண்டும் இதற்காக பெரிய தொகைக்கு
வீடியோ எடிட்டிங் மென்பொருள் எல்லாம் வாங்க வேண்டாம், ஆன்லைன் மூலம்
இத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் வீடியோக்களை எளிதாக இலவசமாக
எடிட் செய்யலாம்.
இத்தளத்திற்கு
சென்று நமக்கென்று ஒரு இலவசப்பயனாளர் கணககு உருவாக்கி கொண்டு
உள்நுழையலாம். வீடியோவை ஓடியோவாக மாற்ற வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும்
வீடியோவிற்கு ஓடியோ மாற்ற வேண்டும், வீடியோவில் தேவையான பகுதியை வெட்ட
சேர்க்க, வீடியோவீடியோவிற்கு வாட்டர்மார்க்கிங்(Water Marking) சேர்க்க,
வெப் கமெரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை எடிட் செய்து விரும்பிய
போர்மட்டு மாற்றலாம்.
இப்படி
வீடியோ எடிட்டிங் மென்பொருள் செய்யும் அத்தனை சேவைகளையும் நாம்
இத்தளத்தின் மூலம் செய்யலாம். 600 MB வரை உள்ள கோப்புகளை நாம்
பயன்படுத்தலாம்.
எல்லா சேவைகளையும்
இலவசமாகவே இத்தளம் கொடுக்கிறது, யூடியுப்-ம் வீடியோ கோப்புகளை எடிட்
செய்யும் சேவையை கொடுக்கிறது. யூடியுப் காட்டிலும் இதில் சேவைகளை
பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது.
No comments:
Post a Comment