இங்கு இடம் பெற்றுள்ள தமிழ் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. மேலும் பல வேறு இணைய தளங்களில் இருந்தும் தருவிக்கப்பட்டு, தமிழ் ஆசிரியை. திருமதி. அர. தனலட்சுமி அம்மாள்(ஓய்வு- பேபி நடுநிலைப்பள்ளி, தாம்பரம்)அவர்கள் துணையுடன் சீர்படுத்தி, பிழை திருத்தம் செய்து இங்கு தரப்பட்டுள்ளது இங்கு தரப்பட்டுள்ள பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்து தமிழ் வளர்ச்சியில் பங்களிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். தற்பொழுது மேலைநாடுகளில் உள்ள மற்ற மொழிக்காரர்கள்கூட தமிழ் பெயர்களை சூட்டி மகிழும் பொழுது, தமிழ் பேசுபவர்கள் இத்தகைய தமிழ் பெயர்களை வைத்து மகிழ தயக்கம் காட்டக்கூடாது அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வடமொழி தொடர்பான பெயர்களும், அதன் பொருளும், அகராதியும் இங்கே தந்துள்ளேன். இது ஒரு சேவை மட்டுமே எனவே தயவு செய்து குழந்தை பெயர் தெரிவு தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டாம்
No comments:
Post a Comment