Sunday, 10 March 2013

உடல் "பளபளக்க"அழகு குறிப்புகள்...

http://www.usilampatti-chellappa.blogspot.in/2013/01/udal-palapalakka-health-tips.html

இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமே எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத ஆரோக்கியமான உடலழகைப் பெற முடியும்.

udal palapalakka - health tipsதற்காலத்தில் விற்கப்படும் கெமிக்கல் பொருட்கள் கலந்த அழகுப்பொருட்களைப் பயன்படுத்துவதன்
மூலம் சில பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக சொல்வதெனில் சருத்திற்கு பயன்படுத்தும் அழகு கிரீம்கள், சன்லோஷன்ஸ் போன்றவற்றை சொல்லலாம். விளம்பரங்களில் வரும் அழகு சாதனப்பொருட்களை, அதன் கவர்ச்சிமிகு விளம்பரங்களில் மயங்கி வாங்கிப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

அதன் விளைவாக உருவாகும் சரும பாதிப்புகளும் அதிகம்.

இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்களை வைத்தே உடலழகை பளபளக்கச் செய்யலாம்.


முகம் பளபளக்க.. 


உங்கள் முகம் பளபளப்பு பெற சாதாரணமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காரட்டே போதும்.
ஒரு கேரட்டை எடுத்துக்கொண்டு,  அதை நன்றாக கூழ்போல் அரைத்து, உங்கள் முகத்தில்,  அந்த கூழை Facial Cream போல் நன்றாக தடவிக்கொள்ளுங்கள்.

அந்த பசையானது தோலில் நன்கு ஊறிய பிறகு சிறிது நேரம் நன்றாக ஊறவிட்டு முகத்தை கழுவுங்கள். உங்கள் முகம் இப்பொழுது புதுப்பொலிவுடன், வழவழப்புத் தன்மையைப் பெற்றிருக்கும்.


உதடுகள் பளபளக்க..


கருப்பு உதடுகளையும் சிவப்பாக்கும் பீட்ரூட்..

சிலருக்கு உதடுகள் ஒரு மாதிரியாக சொரசொரப்புடன் கரியநிறத்தை கொண்டிருக்கும். அதற்கு நீங்கள் Lipstick பயன்படுத்துவதை விட, இயற்கையான பீட்ரூட் கிழங்கில்  சாறெடுத்து, அந்த சாற்றை உங்கள் உதடுகளின் மீது தடவி வாருங்கள்.. ஒரே வாரத்தில் உங்கள் உதடுகளின் நிறம் மாறி, கொவ்வைச் செவ்விதழைப் பெற்றிருக்கும்.

பாதம் பளபளக்க...


பாதாம் எண்ணெயும் பாதமும்..
பாத்ததின் இறுகிய தன்மையைப் போக்கவும், பார்ப்பதற்கு நல்லதொரு வழவழப்பான தன்மையைப் பெறவும் பாதாம் எண்ணையை உங்கள் பாதங்களில் தடவி வர விரைவில் வாழைத்தண்டு கால் அழகைப் பெறுவீர்கள். பாதமும் நல்ல மென்மையான தோற்றத்தைப் பெறும்.

முழங்கை, முழங்கால் பளபளக்க...


முழங்கால்களில் , முழங்கைகளில் உள்ள கறுப்பு நிறம் என்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடியதே.. இந்த முழங்கால், முழங்கையில் உள்ள கருப்பு நிறத்தை போக்க ஆலிவ் எண்ணெயும், பன்னீரும் கலந்த கலவையை தடவி வர.. நாளடைவில் கரிய நிறம் மறைந்து மற்ற இடங்களில் உள்ளதைப்போன்ற தோலின் நிறத்தைப் பெற முடியும்.

தலைமுடி பளபளக்க...


மனிதர்களுக்கு அழகென்று சொன்னாலே அது தலைமுடிதான்.. அழகு நிறைந்தவர்களை மேலும் அழகாக காட்டுவதில் தலைமுடியின் பங்கு அதிகம். அத்தகைய தலைமுடியில் இளநரை, பித்த நரை ஆகியவை இருந்தால் அவற்றைப் போக்க, செம்பருத்தி இலைகள் மூன்றுடன், அதற்குத் தகுந்த சீயக்காய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை தலைக்கு தேய்த்து, சிறிது நேரம் ஊறவிட்டு, பின்பு தலையை அலசினால் இளநரையும் இருந்த இடம் இல்லாம் போயிருக்கும்.. தொடர்ச்சியாக இந்த முறையைப் பின்பற்ற இளநரைக்கு நிரந்தரமாக குட்பை சொல்லிவிடலாம்..

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz