Monday 18 March 2013

எக்ஸெல் தொகுப்பில் காலத்தைக் கணக்கிடலாமா?

குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு இடையே எத்தனை நாட்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் இருக்கின்றன என்று கணக்கிட எக்ஸெல் தொகுப்பில் ஒரு பார்முலா உள்ளது. அது DATEDIF. இதன் பயன்பாட்டினையும் பயன்படுத்தும் விதத்தினையும் இங்கு காணலாம்.


பொதுவாக திட்டமிடுதலின் போதும் எதனையும் கணக்கிடுகையிலும் இரண்டு குறிப்பிட்ட நாட்களுக்கிடையே எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் எனக் கணக்கிடுவது தேவையாக இருக்கும். பணம் கடனாகக் கொடுத்து வாங்குகையில் வட்டி கணக்கிட இது உதவும். முதலில் நீங்கள் கணக்கிட விரும்பும் இரண்டு நாட்களையும் இரண்டு தனி செல்களில் டைப் செய்திடவும். அதன்பின் கீழ்க்காணும் பார்முலாவினை இன்னொரு செல்லில் தரவும்.


=DATEDIF(முதல் தேதி உள்ள செல் எண், இரண்டாம் தேதி உள்ள செல் எண், “உங்களுக்குத் தேவையான தகவல் )

உங்களுக்குத் தேவையான தகவலினைப் பெற குறிப்பிட்ட குறியீட்டினைப் பயன்படுத்த வேண்டும். அவை:
“Y” – இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள ஆண்டுகளைத் தரும்.
“M” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள மாதங்களைத் தரும்.
“D” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள நாட்களைத் தரும்.
“YM” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள முந்தைய ஆண்டின் மாதங்களின் எண்ணிக் கையைத் தரும்.
“YD” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள முந்தைய ஆண்டின் நாட்களின் எண்ணிக்கை யைத் தரும்.

எடுத்துக் காட்டாக A1 என்ற செல்லில் ஒரு தேதியையும் B1 என்ற செல்லில் இன்னொரு தேதியையும் கொடுத்து கீழ்க்காணும் பார்முலா வினைக் கொடுத்துப் பாருங்கள்.

=DATEDIF(A1,B1,”m”) இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள மாதங்களின் எண்ணிக்கை உங்களுக்குக் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறுதி எழுத்துக் குறியீட்டின் முன்னும் பின்னும் மேற்குறி அடையாளம் இருக்க வேண்டும். உங்களுக்கு இங்கு குறிப்பிட்ட டேட்டா தேவைப்படுகிறது என்று பொருள்.

இந்த பார்முலா எக்ஸெல் தொகுப்பின் உதவிக் குறிப்புகளில் இருக்காது. இருந்தாலும் இந்த பார்முலா உங்களுக்கு வேலை செய்திடும். இன்னொரு கவனம் தேவை. கூடுதல் நாளினை இரண்டாவ தாகக் குறிப்பிடும் செல்லில் தர வேண்டும். நாள் டைப் செய்வதனை எப்படி செட் செய்திருக்கிறீர்களோ அதன் படி அமைக்க வேண்டும்.

நான் 2003 டிசம்பர் 14 என்ற தேதியை (12/14/2003) A1செல்லிலும் 2008 ஜனவரி 4 என்ற தேதியை (1/4/2008) B1செல்லிலும் இன்னொரு செல்லில் =DATEDIF(A1,B1,"d") என்ற பார்முலாவினைஜ் இன்னொரு செல்லிலும் கொடுத்துப் பார்த்தேன். விடையாக 1482 என்று வந்தது. நீங்களும் இது போலப் பயன்படுத்தித்தான் பாருங்களேன் .

எக்செல் பயன்படுத்துகிற பான்ட், மார்ஜின்கள் போன்றவற்றை மாற்றி, இந்த மாற்றப்பட்ட மதிப்புகளை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என எக்செலுக்கு உத்தரவிட முடியுமா?


முடியும். ஆனால் இதற்காக ஒரு டெம்பிளேட்டை நீங்கள் உருவாக்க வேண்டும். முதலில் புதிய ஒர்க்புக்கைத் திறந்து கொள்ளுங்கள். அதன் மார்ஜின்களை மாற்றிக் கொள்ளுங்கள். பான்ட்டை மாற்றிக் கொள்ளுங்கள். ஹெடர், புட்டர், லோகோ என வேண்டியதை எல்லம் கொண்டு வாருங்கள். பின்பு File => Save ஆகியவற்றை கிளிக் கெய்யுங்கள். Save as Type என்பதில் Template (*.xrt) என்பதைத் தேர்வு செய்யுங்கள். Book.xlt என பைல் பெயரைக் கொடுத்து அதை XLATART போல்டரில் சேமியுங்கள். வேறு ஏதாவது போல்டரில் சேமித்து விடாதீர்கள். இனிமேல் நீங்கள் உருவாக்குகிற எக்செல் பைல்கள் உங்களது புதிய செட்டிங் அமைப்பிலேயே உருவாக்கப்படும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz