Thursday, 28 March 2013

பனிகாலப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்



பனிகாலப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்
பனிக்
காலங்களில் சோர்வு என்பது அதிகமாக காணப்படும். மேலும் பருவநிலை மாற்றம், வைரஸ்
நோயினால் உடல் வலி ஏற்படும்.
இதற்கு வைரஸ் நோய் பரவாமல் இருக்க காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும்.
சுகாதாரம் இல்லாத கடைகளில் சாப்பிட கூடாது. கழிவறைக்கு சென்ற பின்னர் இரண்டு
கையையும் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். கையை சுத்தமாக கழுவிய பின்னரே சாப்பிட
வேண்டும்.
காய்கறி, சத்தான பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். இரவு பணி முடிந்து
வீடுகளுக்கு செல்வோர் காதுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மப்ளரோ அல்லது
ஹெல்மெட்டோ அணிந்து செல்ல வேண்டும்.
பஸ்களில் செல்வோர் ஜன்னல் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். உடம்பில் வலி
ஏற்பட்டால் அல்ட்ரா செட் மாத்திரையை பாதி அளவுக்கு சாப்பிடலாம்.
உடம்பில் வலி அதிகமாக காணப்பட்டால் முழு மாத்திரையை காலை, மாலை இரண்டு வேளை
சாப்பிடலாம். அதுவும் வைத்தியரிடம் ஆலோசனை பெற்றுத்தான் மாத்திரைகளை எடுத்துக்
கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz