புற்றுநோயை முற்றுப்பெற வைக்கிறது இக்கண்டுபிடிப்பு..!
இங்கிலாந்தில் உள்ள
'இன்ஸ்டிடியூட் ஆப் கேன்சர் ரிசர்ச் (ஐ.சி.ஆர்.,) மையத்தை சேர்ந்த
விஞ்ஞானிகள் மார்பக புற்றுநோய் பரவுவதை தடுக்கும் வழியை கண்டறிந்துள்ளனர்.
உலகளவில் புற்றுநோயால்
பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உயிரிழப்புகளும் தினமும்
ஏற்படுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை 'டியூமர்' என்றும்,
புற்றுநோய் பரவுவதை 'மெட்டாஸ்டசிஸ்' என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
இந்த 'டியூமர்' மற்ற செல்களில் பாதிப்பை ஏற்படுத்தி, புற்றுநோயை
பரப்புகிறது.
மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்ட
பெரும்பாலோனோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 'என்சைம் -எல்.ஓ.எக்ஸ்.எல்-2'
(Enzyme LOXL2) புற்றுநோய் பரவ துணைபுரிவது தெரியவந்தது. இந்த 'என்சைம்'
தடுப்பதன்மூலம் உடலின் மற்ற உறுப்புகளுக்கு புற்றுநோய் பரவுவதை தடுக்க
முடியும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்றிந்துள்ளனர்.
புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியாத்தன் விளைவாகவே 90 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இக்கண்டு பிடிப்பு உயிரிழப்புகளை
பெரும்பாலும் தடுக்கும் ஒரு வரப்பிரசாதகமாகவே எண்ணத் தோன்றுகிறது. ஆய்வுகள்
வளரட்டும்.. வளர்ச்சிப்பெறட்டும்.. உயிர்களைக் காப்போம்.. விஞ்ஞானிகளுக்கு
இப்பதிவின் வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment