Tuesday, 19 March 2013

கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?

இன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் மேப் என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizBZQ3gsiDS3OM7yyronpqBtP57TXdt_RRNzj66RZeXdhfTj-0s7-6pvpCitMUB3RmgNuyhpc9SbDRgkctxsSZYlzp-H9cowxS0iFqdZV0Y5iebSCGFTO1AG9yfUvicePkS4DQ1s9Qr-c/s200/Google-Maps.jpgநகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கொண்டுள்ள இதில், பெரும்பாலான கிராமங்களை குறித்த தகவல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களை, ஊர்களை எப்படி கூகுள் மேப்பில் சேர்ப்பது என்று பார்ப்போம்

1. முதலில் Google Map Maker என்ற தளத்துக்கு செல்லவும். உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Log-in ஆகி கொள்ளவும்

2. இப்போது எந்த ஊரை அல்லது இடத்தை சேர்க்க வேண்டுமோ அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரை கூகுள் மேப்பில் தேடவும். [அது கூகுள் மேப்பில் இருக்க வேண்டும்.]

3. இப்போது உங்கள் ஊரில் உள்ள ஒரு இடம் அல்லது ஊர் எங்கே இருக்கும் என்பது மேப்பை பார்க்கும் போது உங்களுக்கு தெரியவரும். தெரியவில்லை என்றால் Zoom செய்து பார்க்கவும். [Satellite View - இல் தான் பார்க்க வேண்டும்]

4. குறிப்பிட்ட இடம் என்று நீங்கள் உறுதி செய்த பின் Map க்கு மேலே உள்ள Add New>> Add a Place என்பதை கிளிக் செய்யுங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU98zFqF42H1gUXMrKny9qZznisYRoAaR-CU_ARvHluWVCcLVutZ3qh3si2fIUgDcSzo5xEEiPEiJIFRCWQpzxIiCbFCL7M3lph91MJkoDdRxBoDAx-LaquDLkv6pG-BGFb5elEe5BKWM/s320/add+a+new+place.png


5. இப்போது கீழே படத்தில் உள்ளது போல சிவப்பு நிற குறியீட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்து Left Click செய்யவும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkbopqJd0hJToBjD1REPpWZEV08vTX2015fWdlfe8xPfqxZCIK9lCSGKoF_0RCwkTelXS2vT8j9mT3bEGzGqjC0s0AJw4H3oks3_P4BVbNCglshyphenhyphencR5f05GerLGrBsaq293La46YFqN7o/s200/point+a+place.png

6. இப்போது அது என்ன இடம் என்று நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhR7Hgx6HupinSxLimK6arf6G4jSkcWE82hoiEZr7FdRRV0pSo7Wbnk1-_8NLVU4RRhgwrNucTsiZ6Nk0tHjH5kQklnEYPNXK0TafdE09mSi1KcA-lBdz1sOPZ1pWeD0_K1yTUB37fLGI/s320/Name+the+place.png

7. இப்போது மேப்க்கு இடது பக்கம் அது குறித்த மற்ற தகவல்களை கொடுக்கலாம். தளம், தொலைபேசி எண், வேலை நேரம், மற்றவை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVsuDiUcQqGIGnKTFWmGA4wGOuGc7CuSSpWZE3ljS7N63fJzGuwYS9bcz9sMLu9FXoZy7G_PNEgUd_XOIa4QJCvRoJsVlSBU-14Nw4HxW8DG9_cTYgICG0OEk1QHRljao19TtcK3KQmYs/s320/Details+of+the+place.png

8. இப்போது Save Button கொடுத்து Save செய்து விடுங்கள்

9. இடது பக்கத்தில் நீங்கள் Add செய்த Place Bending - இல் இருக்கும். சில நாட்களில் அது உறுதி செய்யப்பட்ட பின் அங்கே சேர்க்கப்பட்டு விடும். நான் சேர்த்த இடங்கள் இரண்டு. கனரா வங்கி [Published], மேல்நிலைப்பள்ளி [Bending]

10. இதே போல ஆறு, ஏரி, குளம், பார்க், கட்டிடங்கள் போன்றவற்றை குறிப்பிடும் போது ஒரு லைன் அல்லது கட்டம் போன்று குறிக்க வேண்டும். அவற்றை மேப்பில் சேர்க்க Step 4 இல் Draw a Line, Draw a Shape என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்

11. இப்போது ஒரு Plus Symbol மேப்பில் இருக்கும். அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஒரு கிளிக் செய்தால் ஒரு Pointer உருவாகும், அடுத்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கிளிக் செய்தால் இன்னொரு pointer உருவாகும்.  அங்கேயே முடிக்க Double Click செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையில் இப்போது ஒரு லைன் உருவாகி இருக்கும். அவற்றை பற்றிய தகவல்களை கொடுத்து Save செய்து விடுங்கள்

இதே போலவே  தான் Draw a Shape -க்கும் செய்ய வேண்டும்
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz