anbhudanchellam
கடந்த முறை எழுதிய பதிவில் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி Forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப மீண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும்.
அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் இன்றைய பதிவு.
உதாரணமாக admin(at)karpom.com என்ற முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை நான் krishnaprabu2710(at)gmail.com க்கு Redirect செய்து இருந்தேன். இப்போது நீங்கள் admin@karpom.com க்கு அனுப்புபவை ஜிமெயில்க்கு வந்து விடும். உங்களுக்கு நான் பதில் அனுப்ப மீண்டும் admin(at)karpom.com க்குள் நுழைய தேவை இல்லை. என்னுடைய ஜிமெயில் கணக்கில் ஒரு சிறு வேலை செய்தால் From Address
"admin(at)karpom.com" என்று மாறிவிடும். இதன் மூலம் பல From Address முகவரிகள் உருவாக்கலாம்.கடந்த முறை எழுதிய பதிவில் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி Forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப மீண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும்.
அதாவது ஒரு ஈமெயில்க்கு பல From Address கள் உருவாக்கப் போகிறோம்.
எப்படி என்று பார்ப்போமா?
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.
2. இப்போது "Accounts And Import"
என்பதை கிளிக் செய்யவும். பின்னர் கீழே படத்தில் உள்ளது போல "Send Email As" பகுதியில் "Add another email address
you own" என்பதை கிளிக் செய்யவும்.
3. இப்போது அடுத்து வரும் விண்டோவில் புதிய அக்கௌன்ட் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.
இப்போது "Next Step" கொடுக்கவும். அடுத்து வரும் பக்கத்தில் "Send through Gmail (easier to
set up)" என்பதை கிளிக் செய்யவும். பின்னர் "Next Step" கொடுக்கவும்.
இப்போது அடுத்த பக்கத்தில் "Send Verification" எனபதை கொடுத்தால் உங்கள் இரண்டாவது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Code அனுப்பப்படும். அதை ஜிமெயில் கணக்கில் Verification கேட்கும் பகுதியில் கொடுத்து விட்டால் போதும்.
இப்போது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Compose பகுதியில் புதியதாக From என்ற பகுதி வந்து இருக்கும். நீங்கள் புதிய மின்னஞ்சல் அனுப்பும் போது அதில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்தால் அதில் இருந்து மின்னஞ்சல் செல்லும்.
இதில் நீங்கள் பயன்படுத்தும் இன்னொரு ஜிமெயில் அக்கௌன்ட் (baleprabu(at)gmail.com)அல்லது, Gmail App Account (prabu(at)baleprabu.com), Webmail account (admin(at)karpom.com), Yahoo Account (baleprabu(at)yahoo.com) என்று எந்த மின்னஞ்சல் முகவரியையும் சேர்க்க முடியும்.
- See more
at:
http://www.karpom.com/2012/02/how-to-use-gmail-to-send-email-from.html#sthash.psnogM0M.dpuf
No comments:
Post a Comment