ஜி-மெயிலின் அட்டாச்மென்ட்டில் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆனால் அந்தக் கோப்பின் அதிகபட்சக் கொள்ளளவு 20 எம்பிதான். ஆனால் எனது நண்பருக்கு என்னுடைய பிடிஎப் கோப்பை அனுப்ப வேண்டும். அதன் கொள்ளளவு 50 எம்பி. (அதுவும் சுருக்கிய பிறகு)
இதற்காக 4ஷேர்டு, இ-ஸ்னிப்ஸ்,ஸ்க்ரிப்டு போன்ற கோப்புப்பகிர்வான் தளத்தில் எனது பிடிஎப்பை ஏற்றி அதன் சுட்டியை மாத்திரம் எனது நண்பருக்குக் கொடுக்கலாம். அதுவும் ஒரு வழிதான்.
இப்போது நாம் பார்க்க இருப்பது வேறு ஒரு மாற்று வழி:
ஜி-மெயிலின் ஓப்பன்பாக்ஸ் வாயிலாக மெகா கோப்புகளை பாக்ஸ்.நெட்டுக்கு ஏற்றி அதனை அப்படியே நண்பருக்கு பார்சல் போட்டுவிடலாம்.
பாக்ஸ்.நெட்டில் பயனர் கணக்கைத் துவக்கி, அந்தக் கணக்கை ஜி-மெயில் சர்வீஸ் உடன் இணைக்கவேண்டும்.
இதை அவுட்லுக் எக்ஸ்ப்ரஸ், தண்டர்பேர்ட் மூலமாகவும் சாதிக்கலாம்.
No comments:
Post a Comment